தீரன் தன் வீட்டின் கீழே நிற்பதை பார்த்த நிலா "டேய் மாமா இங்க என்ன டா பண்ற என கேக்க
ஏது டேயா என தீரன் கேக்க
அது.... அது வந்து.... மாமா மாமா ப்ளீஸ். மாமா யாராவது பாத்துருவாங்க.... நீங்க வீட்டுக்கு போங்க மாமா என கூற
பொண்டாட்டி.... கீழ வா என தீரன் கூற
ம்ஹும்.... முடியாது.... நீங்களும் இங்க நிக்க வேண்டா.... என் அண்ணா.... வீட்டுல தான் இருக்காங்க என கூற
ஓஹ் அப்போ மச்சான் கிட்ட வந்து பொண்ணு கேக்கட்டுமா என கண்ணடித்து கொண்டே கேக்க
மாமா.... விளையாடாதீங்க.... ப்ளீஸ்.... இங்க இருந்து கெளம்புங்க என சுற்றி முற்றி யாராவது வருகிறார்களா என பார்த்து கொண்டும் பயந்து கொண்டும் கூற
தீரனோ "இப்போ நீ கீழ வரலைன்னா அடித்த அஞ்சாவது நிமிசத்துல நா உன் ரூம் ல இருப்பேன்.... எப்டி வசதி என சிரித்து கொண்டே கூற
அவளுக்கு தான் எங்கு சென்று தலையை முட்டி கொள்வது என்று தெரியவில்லை.... இருங்க வரேன் என கூறியவள் யாருக்கும் தெரியாமல் கீழே சென்றாள்
நேரம் 11 மணி என்பதால் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது.... வேகமாக அவன் அருகில் வந்த நிலா "ஏன் மாமா இப்டி பண்றீங்க.... யாராவது பாத்தா என்ன ஆகுறது என கேக்க
சிரித்து கொண்டே அவள் மூக்கை பிடித்து ஆட்டிய தீரன் "யாரு கேட்டாலும் என் புருஷன் கூட தான் பேசுறேன் னு சொல்லு டி என் ஆச பொண்டாட்டி என கூறி அவளை இழுத்து தன் கை வளைவுக்குள் வைத்து கொண்டான்.... இனி அடிக்கடி இப்டி தான் பண்ண வேண்டி இருக்கும்.... சோ ரெடி ஆகிக்கோ என கூற
அதில் அதிர்ந்த நிலா "எதேய் அடிக்கடியா.... போயா யோவ்.... போயா.... இன்னைக்கி வந்ததே பெருசு.... இதுல அடிக்கடியாம்ல என கூற
அதில் வாய்விட்டே சிரித்த தீரன் "எப்டி டி இவ்ளோ அழகா பேசுற.... அழகா பண்ற.... அப்டியே கடிச்சி வைக்கலாம் போல இருக்கு.... என்னா வாய்ஸ் டி உனக்கு என அவளை இறுக்கி அணைத்தவாறே கூற
BINABASA MO ANG
அக்னியை ஆளும் அக அழகி 🔥❤️🌚
Short Storyஇது ஒரு அழகான காதல் கதை.... காதலுக்கு அழகு முக்கியம் இல்லை.... மனது தான் முக்கியம் என்பதை பெண்ணவளுக்கும்.... காதல் எப்பேர்ப்பட்ட மனிதனையும் மாற்றும் என்பதை ஆணவனுக்கும் உணர்த்தும் கதை