பாகம் 24

555 6 24
                                    

காரில் இருந்து இறங்கிய தீரனை அனைவரும் வாயை பிளந்து கொண்டு பார்க்க.... நிலாவோ "இவரு எப்டி இங்க.... ஆபீஸ்ல தான இருந்தாரு என இமைக்காமல் அவனையே பார்க்க வேக நடையுடன் வந்த தீரனோ நாலு எட்டில் நிலாவை அடைந்து அவளை இறுக அணைத்து கொண்டான்.... நிலாவின் நண்பர்களுக்கு இது அதிர்ச்சி என்றால் நிலாவிற்கோ பேரதிர்ச்சி 😳😳🫂🫂🫂

அதிர்ச்சியில் இருந்து தன்னை மீட்டெடுத்து கொண்டவள் மெதுவாக "மாமா என்ன பண்றீங்க.... எல்லாரும் பாக்குறாங்க.... விடுங்க என கூற

தீரனோ சிறு குழந்தை போல அவளுடன் இன்னும் ஒன்றி நின்று "பொண்டாட்டி ஏன் டி போன் எடுக்கல.... மாமா கூட பேச மாட்டியா என குழந்தையாகவே மாறி அவளை இன்னும் இறுக்கி கொண்டே கேக்க நிலாவுக்கோ அவனின் இந்த குழந்தைதனம் கண்ணை கரித்து கொண்டு கண்ணீரை வரவழைத்தது...

அவன் முதுகை தடவி விட்டவளோ "இல்ல டா லட்டு.... நா ஏன் உன்கூட பேசாம இருக்க போறேன்.... என் தங்கம் ல.... பீல் பண்ணாதீங்க.... வாங்க நாம சாப்பிட போகலாம் என கூற

தீரனோ குழந்தை தனம் மாறாமல் "நிஜமாவா என கேக்க

ஆமா மாமா.... வாங்க போலாம் என கூறினாள்

அப்பொழுது ராஜ் "அண்ணா.... நாங்களும் இங்க தான் இருக்குறோம் என கூற

அதுக்கு நா என்ன பண்ணனும் என தீரன் அவளிடம் இருந்து பிரிந்து தன் பேண்ட் பாக்கெட்டில் கை விட்டு கொண்டே கேக்க...

இல்ல.... சிங்கிள்ஸ்சும் இங்க இருக்குறோம்.... அதான் என கூறினான்

நீ சிங்கிளா இருந்தா எனக்கு என்ன என கூறி.... ஆஹ் அப்புறம் நீ தான அந்த பாட்டு பாடுன.... சும்மா சொல்ல கூடாது நல்லாவே பாடுன.... உங்க எல்லாரோட பெர்பார்மன்ஸ்சும் நல்லா இருந்திச்சி என கூற

தேங்க்ஸ் அண்ணா என இழித்து கொண்டே ராஜ் கூற மற்றவர்களும் நன்றி கூறினர்

உடனே நிலா "என்னங்க இவங்க தான் என்னோட பிரண்ட்ஸ், யுவா, ராஜ், தியா, ஸ்ருதி.... நாங்க மொத்தம் 5 பேர் என கூற

அக்னியை ஆளும் அக அழகி 🔥❤️🌚Where stories live. Discover now