பாகம் -4

759 7 0
                                    

ஹாய் பிரண்ட்ஸ்.... கதைய வாசிக்குறவங்களுக்கு ரொம்ப நன்றி.... ஆனா எதாவது கமெண்ட் பண்ணா கதை சரியான போக்குல போகுதா.... இல்லன்னா எதாவது திருத்தம் வேணுமானு தெரிஞ்சிப்பேன்.... கொஞ்சோ சொல்லுங்க ப்ளீஸ்....

ஓகே.... வாங்க.... கதைக்குள்ள போகலாம்....

💕💕💕💕💕

காப்பியை பருகி கொண்டிருந்த தீரன் மனம் முழுவதும் அவளை இன்று பார்த்து விட மாட்டோமா என்ற ஏக்கம்.... அவனின் மன நிலையை கலைத்தது தேவியின் குரல்....

தேவி : வீட்டுல அம்மா அப்பா லாம் என்ன பன்றாங்க பா

தீரன் : ( வலி நிறைந்த சிரிப்புடன்)இல்ல ஆன்ட்டி.... எனக்கு யாரும் இல்ல.... என் சின்ன வயசுலயே என்ன விட்டுட்டு போய்ட்டாங்க....  வளந்தது படிச்சது எல்லாமே ஆசிரமத்துல தான்.... ரொம்ப கஷ்ட்டப்பட்டு படிச்சி இப்போ பிஸ்னஸ்மேனா இருக்கேன்.... எனக்கு இருக்குற ஒரே பிரண்ட் என்னோட கார்த்தி மட்டும் தான்

( தீரன் கூறியதை கேட்டதும் கார்த்தி அவன் தோள் மேல் நட்புடன் கை போட்டு அணைத்து கொண்டான் )

தேவி : அய்யோ மன்னிச்சிரு பா.... தேவை இல்லாம பேசி கஷ்ட்டப்படுத்திட்டேன்

தீரன் : அய்யோ ஆன்ட்டி அதெல்லாம் ஒன்னும் இல்ல.... சரி ஓகே டைம் ஆகிட்டு.... நாங்க கெளம்புறோம் என்று சொன்னவனின் மனமோ அவளை தேடியது....

( ஆனால் ரதி தான் வரவில்லை )

தேவி : சரி பா.... போய்ட்டு வாங்க.... இனி இதுவும் உன் வீடு மாதிரி தான் தம்பி.... நீயும் எனக்கு கார்த்தி மாதிரி தான்.... வீட்டுக்கு அடிக்கடி வா பா
என்று கூறியவர் அறியவில்லை.... கார்த்தி இவர்களுக்கு மாப்பிள்ளை முறை....தீரனும் கார்த்தியை போல் தான் என்றால் தீரனும் அதே முறை தானே வரும் .... தன் மகன் மாறனை போல் என்று கூறாமல் கார்த்தி போல் என்று ஏன் கூறினார் என்று அவருக்கும் தெரியவில்லை....

தீரன் : ( சிரிப்புடன் )சரி ஆன்ட்டி.... கண்டிப்பா வரேன்

கார்த்தி : அத்த.... அந்த எரும வந்தா நா வந்துட்டு போனேன்னு சொல்லுங்க.... எவ்ளோ நேரம் குளிக்குறா.... மீட்டிங் மட்டும் இல்லன்னா அவள பாத்துட்டு போலாம்.... நிலாவ பாத்தே ரொம்ப நாள் ஆச்சி.... திட்டுவா.... வாங்கிக்குறேன்.... சரி அத்த போய்ட்டு வரோம்...

அக்னியை ஆளும் அக அழகி 🔥❤️🌚Where stories live. Discover now