நிலா என்ற கர்ஜனை குரலில் முத்த மயக்கத்தில் இருந்து அதிர்ந்து கண்களை திறந்தவள் குரல் வந்த திசையை பார்க்க.... அவளின் அம்மா.... கையில் கரண்டியுடன் நின்றிருந்தார்....
மா.... நீங்க எப்டி இங்க என நிலா கேக்க
ஏன் டி கேக்க மாட்ட.... நீ கீழ இறங்கி வந்தா நா ஏன் மேல ஏறி வர போறேன்.... காலேஜ்க்கு போகணும் னு எண்ணம் இருக்குதா உனக்கு என கோவமாக பேச
காலேஜாஆஆஆ என இழுத்து தன் அருகில் பார்த்த நிலா "தீரன் இல்லாமல் போக நடந்தது அனைத்தும் கனவு என்பதை உணர்ந்தாள்.... நாக்கை கடித்து தன் தலையை தட்டி கொண்டவள் போர்வையை வைத்து முகத்தை மூட தேவியோ " ஏய் இன்னும் தூங்க போறியா.... ஏற்கனவே ரொம்ப லேட்டு.... எழுந்து வா டி என கூறி சென்றார்
கார்த்தியிடம் போன் பேசி விட்டு அழைப்பை துண்டித்த நிலா தீரனின் நினைவில் உறங்க கனவில் வந்து விட்டான் அவளின் காதலன்....
கனவில் வந்த இதழ் முத்த நிகழ்வை நினைத்தவளின் இதழ்கள் தானாக விரிய தலையை சிலுப்பியவளோ எழுந்து குளியலறைக்கு ஓடினாள்....
இது வரைக்கும் தன்னை ரசிக்காத நிலா கண்ணாடியில் தன்னை ரசித்தாள்.... அவள் இதழ்கள் தானாக "மாமா" என்றது.... அதில் வெட்கப்பட்ட நிலா "இன்று தன்னவனிடம் காதலை சொல்லி விட வேண்டும் என நினைத்தாள்....
வேகமாக காலேஜிற்கு கிளம்பினாள்....
********
இங்கு தீரனோ.... என்றும் இல்லாத சந்தோஷத்தில் இருந்தான்.... தன்னவளுக்கு தன்னை பிடித்திருக்கிறது.... அவள் என்னை காதல் செய்கிறாள்....அவளின் அன்பும் அக்கறையும் தனக்கு மட்டும் தான் என நினைத்து கர்வம் கொண்டான்.... நீ லவ்வ சொன்ன அடுத்த நிமிஷம் உன் கழுத்துல தாலி கட்டுறேன் டி பொண்டாட்டி என உடற்பயிற்சி செய்து கொண்டே பேசி கொண்டிருந்தான்.....இன்று ad எடுக்க வேண்டும் என்று கார்த்தி கால் பண்ணி சொல்ல... நீ ஸ்பாட்க்கு போ.... நா வரேன் என கூறினான்...
*********
இங்கு வைஷாலி மனதில் பல எண்ணங்கள் ஓடினாலும் அவள் நோக்கம் என்னவோ தீரனை அடைவது தான்....

CZYTASZ
அக்னியை ஆளும் அக அழகி 🔥❤️🌚
Krótkie Opowiadaniaஇது ஒரு அழகான காதல் கதை.... காதலுக்கு அழகு முக்கியம் இல்லை.... மனது தான் முக்கியம் என்பதை பெண்ணவளுக்கும்.... காதல் எப்பேர்ப்பட்ட மனிதனையும் மாற்றும் என்பதை ஆணவனுக்கும் உணர்த்தும் கதை