அவர் கூறியதை கேட்டு கொண்டிருந்த தீரன் ஸ்டாப் இட் என கத்தினான்....
அதில் கணேசன் அதிர்ந்து விட்டார்...
அவரை பார்த்த தீரன் " போதும்.... இதுக்கு மேல என் நிலா கஷ்ட்டப்பட்டத சொல்லாதீங்க.... அவ கண்ணீருக்கு காரணமான ஒவ்வொருத்தரையும் கருவறுக்காம விட மாட்டேன்.... என் காதலுக்கு நிலா சம்மதம் சொன்னா மட்டும் போதும் என கூறினான்...ஆனா மாப்ள.... அது அவ்ளோ ஈசி இல்ல.... நிலா கல்யாணமே வேண்டா னு சொல்லிட்டு இருக்குறா.... என்ன பண்ண போறீங்க என கேக்க
அத நா பாத்துக்குறேன்.... ஆனா என்ன ஆனாலும்.... நா என்ன பண்ணாலும் நீங்க இடையில வர கூடாது என தீரன் கூற
நா ஏன் மாப்ள வர போறேன்.... ஆனா என் பொண்ணே உங்கள வேண்டா னு சொன்னாலும் அவள விட்டுற மாட்டிங்கல்ல.... நா உங்கள நம்பலாம் ல.... என் பொண்ண கஷ்ட்டப்படுத்திர மாட்டிங்கல்ல என தன் மகளின் மேல் உள்ள அக்கறையில் கேக்க
கண்டிப்பா அவள விட்டுற மாட்டேன்.... நல்லா பாத்துக்குவேன்.... என்னால அவளுக்கு எந்த கஷடமும் வராது என கூறியவன் அறியவில்லை இனி அவளின் ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் காரணமாக இருப்பவனே அவன் தான் என....
இது போதும் மாப்ள என தன் கண்ணீரை துடைத்து கொண்டவர் " சரி மாப்ள நா கெளம்புறேன் என்றார்
உடனே தீரன் "நா வேணும்னு பண்ணல, சாரி மாமா ... வேணும்னா ஹாஸ்பிடல் போய்ட்டு போலாம் என கூற
பரவாயில்ல மாப்ள.... என் மனசு சந்தோசமா இருக்கு.... இதே சந்தோஷத்தோட நா கெளம்புறேன் என கூறினார்....
டேய் கார்த்தி என தீரன் அழைக்க
ஆஹ்.... சொல்லு டா.... நா ஒருத்தன் இங்க இருக்கேன் னு இப்போ தான் உனக்கு தெரியுதா.... கல்யாணமே இன்னும் நடக்கல.... அதுக்குள்ள மாமனார் மருமகன் தொல்ல தாங்க முடியலப்பா என தலையில் கை வைக்க
வாய மூடிட்டு என் மாமா வ கொண்டு போய் விட்டுட்டு வா டா ... கொஞ்சோ வேலை இருக்கு என கூறினான்
சரி என தன் மாமாவை அழைத்து கொண்டு கிளம்பினான் கார்த்தி
*************

ČTEŠ
அக்னியை ஆளும் அக அழகி 🔥❤️🌚
Povídkyஇது ஒரு அழகான காதல் கதை.... காதலுக்கு அழகு முக்கியம் இல்லை.... மனது தான் முக்கியம் என்பதை பெண்ணவளுக்கும்.... காதல் எப்பேர்ப்பட்ட மனிதனையும் மாற்றும் என்பதை ஆணவனுக்கும் உணர்த்தும் கதை