பாகம் -8

526 4 0
                                    

தீரனின் அறைக்குள் நுழைந்த கார்த்தி டேய் மச்சான் சொல்லவே இல்ல.... அவன முடிச்சிட்டனு....
டேய் உனக்கு தெரியாதா.... முடிச்சிட்டு வந்து சொல்லி தான் எனக்கு பழக்கம்னு தன் தாடியை நீவிய படியே கூறினான் தீரன்...
ஆஹ் தெரியும் டா.... அதான் பீம் கிட்ட போன் பண்ணி கேட்டேன்.... அவன் தான் சொன்னான்... பாஸ் இப்போ தான் எல்லாத்தையும் முடிச்சிட்டு கிளம்புனாருன்னு தன் அழகை கண்ணாடியில் பார்த்தப்படி கூறினான் கார்த்தி...
" கார்த்தி எனக்கு கொஞ்சோ டீடெயில்ஸ் வேணும் "
என்ன டா... இப்போ தான ஒருத்தன உரு தெரியாம அழிச்ச... அடுத்த ஆளு யாரு... சரி ஓகே சொல்லு....
"ரதிநிலா " இதழில் சிறு புன்னகையோடு வானை நோக்கியபடி கூறினான் தீரன்

அதிர்ச்சியுடன் " டேய்ய் அவ என்ன டா தப்பு பண்ணா 😟 அவள ஏன் கொல்ல போற... அதிர்ச்சி குறையாமல் கேட்டான் கார்த்தி

ஆமா... கொல்ல தான் போறேன்... ஆனா கத்தியால இல்ல.... என் காதலாள... எஸ்... என் காதலாள அவள கொல்ல போறேன்.. ஐ லவ் ஹெர் என்று அதே நிலையில் நின்ற படி கூறினான் தீரன்

மச்சாஆஆஆ 🤩🤩 ஓடி வந்து தீரனை தன்னை நோக்கி திருப்பிய படி கண்ணில் ஒட்டு மொத்த சந்தோசத்தோடு நிஜமாவா டா.... எப்போல இருந்து.... இன்னைக்கி அவள பிக்கப் பண்ண போனியே அப்பவா ஆர்வத்துடன் கேட்டான் கார்த்தி

சிறு சிரிப்புடன்.... இல்ல டா.... இன்னைக்கி அவ வீட்டுக்கு போனோம் ல அப்போ

ஆனா அப்போ தான் நாம அவள பாக்கவே இல்லையே

நீ அவள பத்தி சொன்னியே.... குளிர் தண்ணில குளிச்சதுக்கு அவ அந்த தண்ணி கிட்டயே பேசுனது எனக்கு ரொம்ப புடிச்சிருந்திச்சி டா.... எத்தனையோ பொண்ணுங்க இந்த காலத்துல எப்டிலாமோ இருக்காங்க.... ஆனா அவ.... மொத்தமா... மொத்தமா வேற டா.... கார்த்தியின் பிடியில் இருந்து விலகிய படியே நடந்து கொண்டே பேசினான்... இதோ இன்னைக்கி காலேஜ்ல அவள பாக்க போனப்போ செடி கிட்ட பேசிட்டு இருந்தா.... எந்த ஒரு ஆடம்பரமும் அவ உடைல,பேச்சுல னு எதுலயுமே இல்ல.... ஸ்டைலிஷ் இங்கிலிஷ் இல்ல.... எந்த ஒரு சீனும் இல்ல... ஆனா என் கண்ணுக்கு அவ்ளோ அழகா தெரிஞ்சா டா... அவ எனக்கு வேணும் மச்சான்...

அக்னியை ஆளும் அக அழகி 🔥❤️🌚Where stories live. Discover now