காலை 5 மணி... அபாய சங்கு ஔி அலரியது... அதாங்க இந்த அலாரம்....
"ஏய் ஏண்டி நீயும் எழுந்திருக்காம எங்க தூங்க்கத்தையும் கெடுக்குற" வேற யாரு.. கூட பொறந்த பொறப்பு தான் கத்துரான்
கண்ண தொரக்க முடியாமா தட்டு தடுமாறி அத அமத்தினேன்
"காபி பொடுறேன் சீக்கரம் குழி கோசல " இது வேற யாரும் இல்லங்க என்ன பெத்த தெய்வம் அம்மா...
ஒரு வழியாக அறை தூக்கத்துல குழிக்க போனேன்...
கண்கள் தானுங்க தூக்கத உணருது..
ஆனா என் மனசு.. பாரதியை சுற்றி வந்ததுஇப்போ கிளம்புறேன் போறேன் அவள பாக்குறேன் கொண்டாடுறேன்...
எத்தனை நாள் கனவு...
நா நினைச்சது நடக்க போகுது."இராஜாத்தி சீக்கரம் வா பஸ் போய்டும்"அப்பா குரல் கேட்டதுக்கு அப்பறம் தான் நியாபகம் வந்தது நான் குழிச்சுட்டு இருக்கேன்னு...
ஒருவழியா குழித்துவிட்டு காபி குடிக்கும் பொழுது
"இன்னிக்கே அவசியமா போனுமா" அம்மா ஆரமிச்சாங்க.,
நா பாரதிய பாக்க போறது இவங்களுக்கு பிடிக்கல
"ஐயோ ஏன்மா மறுபடியும் மொதல இருந்தா,"
"ஐயோ இல்லடி ஒரு பொம்பல புள்ள கல்யாணத்துக்கு முன்னாடி வேற வீட்டுல இப்படி மூனு நாள் நாலு நாளாம் தங்க கூடாதுடி" மறுபடி ஆரமிச்சாங்க, கடுப்பாச்சு,
"ஹையோ, அம்மா நா என்ன ஊரு சுத்தவா போறேன்? பாரதி கல்யாணத்துக்கு தானே போறேன்,
போய்ட்டு இங்க தானே வரபோறேன்., நா என்ன ஊருக்குள்ள யாரும் பண்ணாததையா பண்ணபோறேன்" கத்திட்டேங்க ஆமா நானே எப்படா அவள பாக்க போறேனு காத்து இப்ப தான் அமஞ்சதுன்னு இருக்கேன்."சரிடி அதுக்கு இப்படி மூனு நாள் போனும்னு யாரு சொன்னா, கல்யாணத்தன்னக்கி காலைல போனா போதும்" நா மொறச்சேன், அத பாத்துட்டு, " சரி மொதோ நாள் போலாம்ல" னு சொன்னதும்
அப்படியே வர கோவத்துக்ககு என்ன பண்றதுனு எனக்கே தெர்லங்க,
ஒரு மாசமா போராடி
அப்பாட்ட நானே கெஞ்சி,
வீட்டுல வேளையல்லாம் பாத்து குடுத்து போறத்துக்கு பர்மிஷன் வாங்கி கிளம்ப போற சமயத்துல இப்படி கவுத்த எப்படிங்க.,"அம்மா உங்களுக்கே தெரியும் பாரதி என்னோட ஆறு வருஷமா பெஷ்டு ப்ரண்டு, அவ கல்யாணத்துக்கு மட்டும் தானேமா", னு கெஞ்சுனங்க,
"அவ தான் கல்யாணம் முடிஞ்சதும் உடனே கிளம்பி வரேன்னு சொல்றால விடு, வா கோசல பஸ்க்கு நேரமாச்சுல" னு என் அன்பு அப்பா சொன்னாங்க,
"என்னமோ பன்னுங்க சரி சரி நீ பத்தரமா பொய்ட்டு வாடி பஸ்லலாம் யார்டயும் பேசத, போனே யூஸ் பண்ணாத, தண்ணி பாட்டில் வச்சுருக்கல்ல, ம்ம் அப்பறம் பாத்ரும் வந்தா தஞ்சாவூர் பஸ்டாண்டுள போய்டுடி, அடக்கி வைக்காத அதோட நிம்மதியா போக முடியாதுடி,"னு அட்வைஸ் பண்ண ஆரமிச்சாங்க,
பாத்து பாத்து வாங்குன கிப்டு, எடுத்து வச்ச,துணி எல்லாம் சரியா எடுத்துட்டு கிளம்புனேங்க
ஒரு வழியா பஸ் ஏறிட்டேங்க, அப்பா பஸ் கிளம்புற வர நின்னாங்க, சும்மா சொல்ல கூடாதுங்க செலவுக்கு நிறையாவே பணம் கொடுத்தாங்க அப்பா,
டிக்கெட் எடுத்துட்டேங்க உங்களுக்கும் சேத்து தான்.. என்ன அப்படி பாக்குறீங்க நீங்களும் பாரதி கல்யாணத்துக்கு வரீங்கள்ள,
பஸோட என் உடம்பு தானுங்க முன்னோக்கி போச்சு., ஆனா என் மனசு ஆறு வருஷம் பின்னோக்கி போகுது,
யாரு இந்த பாரதி., ஏன் அவ கல்யாணத்துக்கு இவ்வளோ துடிச்சு குதுகலமா போறேன் அப்படி அவ என்ன பண்ணா, எங்க நட்பு பயணம் பத்தி நீங்கலும் தெரிஞ்சுக்கலாம் வாங்க, அட வாங்க,
YOU ARE READING
தெளிந்த நிலவு
Teen Fictionமேகக் கூட்டங்களின் உலாவில் தெரியும் நிலவைவிட... மேகக் கூட்டத்தை விளக்கி பார்க்கும் நிலவே.. முழுமையான அழகு வழியும் நிலவாகும்... இதுவே வாழக்கை, இடையூறை விளக்கினால்.. வாழ்க்கையின் முழு அழகு புரியும், இக்கதை உண்மை சம்பவமே.. கொஞ்சம் நானும் அதில் கதைக்கி...