ற.

157 10 3
                                    

இருவரும் குதூகலமாய் அவர்கள் கதையை சொன்ன பிறகு..
பாரதி அவளின் அட்வைஸ் க்ளாஸை ஆரம்பித்தாள்..

பாரதி :"இந்த வயசுல நமக்கு வரது எல்லாம் சகஜம் தான்..  ஆனா அதுல நல்லா ஸ்ட்ராங்கா நம்ம இருந்தோம்னா..  நம்மள யாராலயும் பிரிக்க முடியாது னு நாம ஸ்ட்ராங்கா ப்ளான் எல்லாம் நல்லா பக்காவா போடுவோம்..  ஆனா அந்த ப்ளான்.. நம்மள சுத்தி இருக்க யாரையுமே பாதிக்க கூடாது..  முக்கியமா நம்ம அப்பா அம்மா..  நீங்க ரெண்டு பேரும் முடிவு பண்ணிருக்குறது.  உங்க அப்பா அம்மா பத்தி தெரிஞ்சு ஒத்துக்க மாட்டாங்கனு நல்லா புரிஞ்சு தான் போட்டுருக்கீங்க.. ஆனா நீங்க தான் புரிய வச்சு அவங்க ஆசிர்வததோட கல்யாணம் பண்ணனும்.. "

அனு :"பாரதி.  இவங்க எல்லாம் மனுஷ ஜென்மமே இல்ல டி.. காதல்னு சொன்னலே கத்தி அருவாள தூக்கிட்டு கொலை பண்ண கிளம்புவாங்க. "

வள்ளி :"ஆமா.  அதும் என் அப்பா எங்க ஜாதி சங்கதோட தலைவர்.  வெட்டி போட்ருவாரு.. "

இது எல்லாம் தெரிஞ்சும் எப்படி இவளுங்க காதல் பண்றாளுங்க..  நாம கனவு ல ஹீரோ ஓட டூயட் பாடனும்னு நினைச்சாலே அம்மா ஓட தோசை கரண்டியும்.  அப்பா ஓட டேபிள் ல உள்ள ஸ்கேலும் தான் ஞாபகம் வருது..  நம்ம எல்லாம் அதுக்கு சரிபட்டு வர மாட்டோம்..

பாரதி :"அவங்களோட பொண்ணுங்க நீங்க..  அவங்களோட பிடிவாதம் உங்களுக்கும் இருக்கு ல??  பிடிவாதமா சொல்லுங்க.  உங்க ஆசிர்வாதம் இல்லாம கல்யாணம் பண்ணிக்க மாட்டோம்..  அதே சமயம் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டோம்..  என்னைக்கு நீங்க ஒத்துகுறீங்களோ..  அன்னைக்கு  நாங்க கல்யாணம் பண்ணிக்குறோம் னு..  மாப்பிள்ளை எதும் செல்வாக்குல கம்மி னு நினைச்சாங்கனா.  கொஞ்சம் டைம் கேட்டு.  உங்க ஆளுட்ட சொல்லி அவங்க எதிர்பாக்குற சம்பளம் வாங்க சொல்லுங்க.. "

அனு :"அது எல்லாம் இங்க செல்லாது டி..  உக்காந்து பேசுற ஆளுங்களே இல்ல டி இவங்க எல்லாம் மிருகம் டி..  எங்க சொந்தகார அக்கா பொறுமையா இப்படி தான்  இருந்துச்சு.. இவனுங்க ப்ளான் பண்ணி வேற ஆள கல்யாணம் பண்ணி வைக்க பாத்தாங்க.. ஒரு கட்டத்துல பொறுமைய இழந்து ஓடி போய் கல்யாணம் பண்ணிகிச்சு.  இரண்டு வருஷம் அப்பறம் அது இருக்கு இடம் தேடி கண்டுபிடிச்சு விஷம் வச்சு கொண்ணுட்டாங்க டி. "

கோசலை :"ஆத்தாடி.  என்ன டி சொல்ற?? "

வள்ளி :" ஆமா டி.. இந்த மாதிரி எங்க பக்கம் நிறையா நடந்துருக்கு..  வெட்டி போட்ருவாங்க..  முடிஞ்ச அளவு பிரிச்சுவிடுவாங்க..  மிரட்டி வேற ஆள கல்யாணம் பண்ணிக்க சொல்லுவாங்க..  பையன கொண்ணுட்டு பொண்ண வேற ஆளுக்கு கல்யாணம் பண்ணுவாங்க..  கல்யாணம் பண்ணிகிட்டாலும் தாளிய அறுத்துட்டு எங்க ஜாதி ஆளுக்கே திருப்பி கல்யாணம் பண்ணி வைப்பாங்க.   இப்படி நிறையா டி..  "

பாரதி :"என்ன டி இவ்ளோ கொடூரமா சொல்றீங்க?? "

அனு :"அப்படி நடக்குது டி.. "

கோசலை :"அப்படி இருந்தும் நீங்க எப்படி டி இப்படி தைரியமா லவ் பண்றீங்க?? "

வள்ளி :"மனசுக்கு அது எல்லாம் தெர்ல யே.. அதுக்கு தான் இப்படி முன்னாடியே பக்கா ப்ளான் பண்றோம்.. "

பாரதி :"சரி டி.  பாத்து பண்ணுங்க..  மாட்டிக்காதீங்க "

அனு :"ஆமா டி அதுக்கு தான் பாத்து பாத்து ப்ளான் பண்றோம்.. "

வள்ளி :"ஆனா பாரதி உன் லவ் ஸ்டோரி டிப்ரண்டா இருக்கு..  நீ லவ் காக தான் விழுந்து விழுந்து படிக்குற போல.. "

கோசலை :"ஆமா ஆமா..  டி.. "

பாரதி :" ம்ம்.. "

அனு:"மேடம் +2 முடிஞ்சதும் கல்யாணம் போல.. "

பாரதி :"இன்னும் முடிவு பண்ணல..  அம்மா ஓகே சொல்லனும்.. "

கோசலை :"ஓகே சொல்லிடுவாங்க..  நீங்க எல்லாம் மறக்காம கல்யாணதுக்கு வந்துருங்க டி..  ஜாலியா...  எல்லாம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்..

யாரோ..  யாரோடி..
உன்னோட புருஷன்.. "

பாரதி :"ஐயோ போதும் நிப்பாட்டு.. வா போலாம் பாய் டி.. "

வள்ளி,  அனு :"பாய் "

தெளிந்த நிலவுTahanan ng mga kuwento. Tumuklas ngayon