என்னதான் நாட்கள் நகர்ந்தாலும் நானும் மீனாவும் பட கதை, பாட்டு பத்தி பேசுரத விடலபா!!
நாங்க நல்லா இருக்குறது யாருக்கும் பிடிக்கல போல!
சேந்தவங்கல்ல ரூல்ஸ்க்கு பயந்தும்,வீட்ட பிரிஞ்சு இருக்க முடிலனும்,கொஞ்ச பேரு வேற ஸ்க்கூல் போயாச்சு,அப்பறம் கம்ப்யூட்டர் ல இருந்து பயோக்கும் பயோல இருந்து கம்ப்யூட்டர்க்கும் மாறினாங்க!!
அதுல நம்ம சிவகாமியும் ஒரு ஆள்!! மேடம் இதுக்கு தான் அழுதுற்காங்க!!அப்பறம் என்ன அந்த பொண்ணு பையோ க்ருப் ரூம்க்கு மாறிட்டு!! அதான் க்ரவுண்ட் ப்ளோர்!!
மீனா வேற ரூம்,
அப்பறம் நானும் ப்ரியாவும் பாரதி ரூம்க்கு மாத்த பட்டோம்!! பாரதி ரூம் ல இருந்தவங்கள வேற ரூம்க்கு மாத்திட்டாங்க!!
அப்பறம் என்ன ஆட்டம் தான்!!படுபாவிங்க டெய்லி டெஸ்ட் :(:(:(;(
எல்லாம் டெஸ்ட்க்கு விழுந்து விழுந்து படிச்சோம்!!,இல்ல இல்ல படிச்சாங்க!!,நாங்க படிக்குற மாறி நடிச்சோம்!!
என்ன அப்படி பாக்குறீங்க!! இந்த 15 வயசு பொண்ணுங்க ஒன்னு சேந்தா!! வேற என்னங்க பேச்சு, இது வர பாத்த பசங்க, காதல் மன்னங்க, காதல் கதை, நம கூட இருந்தவங்க பண்ண தில்லுமுல்லு, இது எல்லாம் பேசுற நேரம் நம்ம ஸ்டடி டைம் தான்!! அதான் ஒன்னுக்கு பத்து ஸ்டடி வச்சுருக்கானுங்களே!! அப்படி இந்த பேச்ச பேசுறதுக்கே ஒரு கேங் சேந்துச்சுன்னா பாத்துகோங்களேன்!!
ஆனா இன்னும் பாரதியும் , ப்ரியாவும் ஒன்னா சேந்து தனியா பேசுறத விடலங்க!!
மாசத்துக்கு ஒரு டைம் தான் வீட்டுக்கு விடுவாங்கனு சொல்லி தான் சேத்தாங்க!! ஆனா இதுங்களுக்கு எப்படி தான் திடீர் மயக்கம்!! திடீர் செக்கப் எல்லாம் வருமோ தெரில அடிகடி நிறைய பேர் வீட்டிக்கு போனாங்க!!
பாரதி:"நமக்கெல்லாம் ஏண்டி இந்த ஹோம் சீக் வர்ல??"
நா:"அதான் அல்ரெடி நா ஹாஸ்டல்ல இருந்த எஸ்பீரியன்ஸ் இருக்கில!! ஆமா.உங்களுக்கு ??"
YOU ARE READING
தெளிந்த நிலவு
Teen Fictionமேகக் கூட்டங்களின் உலாவில் தெரியும் நிலவைவிட... மேகக் கூட்டத்தை விளக்கி பார்க்கும் நிலவே.. முழுமையான அழகு வழியும் நிலவாகும்... இதுவே வாழக்கை, இடையூறை விளக்கினால்.. வாழ்க்கையின் முழு அழகு புரியும், இக்கதை உண்மை சம்பவமே.. கொஞ்சம் நானும் அதில் கதைக்கி...