294 32 10
                                    

இரண்டு நாள் புள்ளா அழுகாச்சி , பொலம்பல் னு ஹாஸ்டலே கப்பல் கவுந்த கதை தான்!!

காயு:"ஏஏஏ என்ன டி இப்படி.."

கோசலை:"ஆமா டி .. எனக்கு இன்னும் தாங்க முடில.. ஹேமா இனி எப்படி டி இருக்க போறா.. பாவம்!"

பாரதி:"ஏ ச்சீ! இரண்டு நாளா இதே பேச்சு! ஏன் டி இப்படியே சோக வயலின் வோட்டூறீங்க??"

என்ன இவ!!?

கோசலை:"ஏஏ நீ என்ன லூசா?? எப்படி டி கவலை படாம இருக்க சொல்ற?? யாரு தெரியாத பாய் பிரியாணி கடைய ஒரு நாள் சம்மந்தம் இல்லாம  மூடுனால ஏன் பாய்க்கு என்னாச்சு னு யோசிக்குற ஆள் டி நா!! இப்படி ருசி ருசியா ஒவ்வொரு தடவையும் பிரியாணி போட்ட அந்த தெய்வமே தெய்வத்துட்ட சேந்துருச்சு?!"

பாரதி,காயு:"அறிவுக்கெட்ட முண்டம்!!"

அஅஅ

பாரதி:"அம்மா போனதுக்கு பீல் பண்ணுனா பிரியாணி பத்தி.. உன்னைய!!"

ஐயோ செத்தா கோசலை!!

கோசலை:"இல்ல டி இல்ல டி அப்படியே ஒரு ப்ளோ ல! நானாது பரவால்ல அறிவுக்கெட்ட முண்டம் தான் அட்லீஷ்ட் அதுக்காது பீல் பண்றேன்! நீ நன்றிக்கெட்ட நாய் அதுக்கு கூட பீல் பண்ண மாட்ற!"

பாரதி:"ப்ரண்டோட அம்மா இறந்துட்டாங்க!! நமக்கு எல்லாம் அம்மா மாதிரி இருந்தவங்க.. தாங்க முடில தான் அதுக்கு நாம எல்லாம் இப்படியே இருந்தா!! சரியாகுமா?? நாளைக்கு ஹேமா வரா!"

கோசலை:"அப்படியா?? எப்போ சொல்லவே இல்ல? யாரு சொன்னா?"

பாரதி:"முந்திரி கொட்டை !! ஒரு பேச்சுக்கு சொல்றேன்! நாளைக்கு அவ வந்து நாம எல்லாம் இப்படியே சோக வயலின் வாசித்தா அவளுக்கு எப்படி இருக்கும்?? அவ நல்லா படிக்கனும்னு தானே அவங்க அம்மா அவள்ட தன்னோட கஷ்டத்த காட்டிக்கவே இல்ல??"

ஆமால!!

காயு:"ஆமா டி! டான் இத பத்தி யோசிக்க வைக்க கூடாது! அவ பாவம்!"

பாரதி:"அதனால நாம முதல இதுல இருந்து வெளில வந்தா தான் அவள வெளிக்கொண்டு வர முடியும்!"

காயு:"அதுக்கு என்ன டி பண்ண சொல்ற"

அஅஅஆஆஆ

கோசலை:"நா சொல்றேன்! கொசு நீ உன்னோட கதைய சொல்லு!"

பாரதி:"என்ன கதை?"

காயு:"ஏஏ ஆமா அன்னைக்கு ஏதோ கிட்டத்தட்ட கல்யாணம் பிக்ஸ் ஆன மாதிரி னு சொன்னியே !! சொல்லு!"

ஆத்தாடி... பல்ப் இப்படி எரியுது..

கோசலை:"ஸ்டாப் வெட்கப்பட்டுபையிங்!! ஸ்டார்ட் நரேட்டிங் யூர் ஸ்டோரி!!"

காயு:"ஏஏ இளங்கு!! இங்கிலீஷ் எப்ப டி இப்படி பேச கத்துட்ட??"

கோசலை:" ஹ ஹ ஹ! ஒரு இங்கிலீஷ் ப்ரொபவசர் தங்கச்சிக்கு இங்கிலீஷ் பேச தெரியாம இருந்தா அசிங்கம் அவமானம்  வெட்கம் வேதனை"

பாரதி:"தூ"

கோசலை:"சரி சரி ஆரமி!"

பாரதி:"அது உங்களுக்கு நா எப்படி டி சொல்ல.."

கோசலை:"பரவால்ல எப்படியாது சொல்லிடு!"

காயு:"ஏ ச்சீ கொஞ்சம் அமைதியா இரு அவ சொல்லட்டும்!"

தெளிந்த நிலவுWhere stories live. Discover now