அத்தியாயம் 1

11.6K 263 19
                                    

இருளெங்கிலும் ஜொலித்திடும் நட்சத்திரங்களை போல, விளக்குகள் ஆங்காங்கே எறிந்துகொண்டு அவ்விரவையும் பகலென காட்டியது, சென்னை சென்ரல் ஸ்டேசன்... நிறைய ரயில்கள் அங்கே நின்றிருந்தது, அதில் மதுரைக்கும் செல்ல வேண்டிய பாண்டியன் எக்ஸ்பிரஸ் கிளம்ப தயாராக இருந்தது......

" சரிடா பாய்! அப்பாவ கேட்டேன் சொல்லு,  எல்லாரும் பார்த்துப் போங்கடா " என்றான், தன் கல்யாணத்திற்காக வந்த நண்பர்களை வழியனுப்பினான்  கல்யாணமாப்பிள்ளை...

" ம்ம்... ஒகே டா கல்யாண மாப்பிள்ளை, லைப்பை என்ஜாய் பண்ணு, ஹாப்பி மேரீட் லைப் டா, " தன் நண்பனுக்க மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள் கூறி, ட்ரேயினில் ஏறினார்கள்.

" தாங்க்ஸ் மச்சிஸ்,"  என்றவன் கிளம்பினான்..

"  நீங்க எல்லாரும், உள்ள போங்கடா,  நான் அப்பா கிட்ட  போன் பண்ணி பேசிட்டு வந்திடுறேன் " என்றான் அவன்...

" ஒ.கேடா, சீக்கிரமா வந்திரு, நாங்க உள்ள போய்  உட்கார்ந்து இருக்குகோம்  " என்றவன் தனது நண்பனின், லக்கேஜ்ஜையும் வாங்கி கொண்டு உள்ளே சென்றனர்.
ட்ரேயின் கிளம்ப ஆரம்பித்தது...

" என்னடி இன்னும் அவ வரல, வேற எங்கயாவது மாட்டிகிட்டாளா, பயமா இருக்குதுடி..." அவளின் தோழி,
"  ஏய் நீ ஏன் பயப்பிடுற அவ வந்திருவாடி... " இன்னொரு தோழி கூறினாள்,."  ட்ரெயின் கிளம்பிருச்சே என்னடி பண்ண, அவளுக்கு வேணா போன்  பண்ணுவோம்டி.... "

" ம் பண்ணுடி.....  "  என்றாள், ரிங் போக அவள் எடுக்கவே இல்லை....

அவன், " ஓகேப்பா,  ட்ரெயின்  எடுத்தாச்சு அப்புறம் பேசுறேன்ப்பா ..... " என்றவன், இரயில் மெதுமெதுவாக நகர ஆரம்பித்ததை கண்டு வெளியே எட்டி பார்த்தான்.... அங்கே அவள் ரயிலை பிடிக்க ஒடிவந்து கொண்டிருந்தாள்.

" ஹேய் என் கை பிடுச்சுகோ " என்றவனின்  கையை நீட்டினான். அவளுக்கு உதவவே,
அவளும் அவன் கை பிடித்துகொள்ள, உள்ளே அவன் உதவியால் ஏறியவள் மூச்சு வாங்கி அங்கே நின்றாள்.

                 "வருவான்"Where stories live. Discover now