அத்தியாயம் 5

5.6K 213 37
                                    

அம்மா..... அம்மா.... " தேவியை அழைத்தவாறே சக்தி கீர்த்தீயின் வீட்டுக்குள் நுழைந்தாள்....

" என்னாம சக்தி எங்கயாவது வெளியே போறீங்களா இரண்டு பேரும்.... "
" ஆமாமா....
நானும் கீர்த்தீயும் புத்தகக்கண்காட்சிக்கு போறோம்மா, எங்க அவள காணோம்..." சக்தி, கேட்டாள்.

" புத்தககண்காட்சிக்கா ? அவ காலேஜ் புத்தக்கத்தை, தவர வேற எந்த புத்தக்கமும் அவளுக்கு புடிக்காதே, எப்படி அவ வர ஒத்துகிட்டா..... "

" அவ எங்கம்மா, ஒத்துகிட்டா. முதல்ல நான் சனாவ தான் கூப்பிட்டேன். அவ அவங்க அம்மாகூட அத்த வீட்டுக்கு போறேன் சொல்லிட்டா. ஜீவா கிட்ட கேட்டா, போடி அங்க யாராவது போவாங்களான்னு திட்டிட்டு போயிட்டான், கடைசி கீர்த்தீ கால்ல கையில விழுந்து ஒத்துக வச்சுடேன்மா. "

" சரிமா சாப்பிடு சக்தி.." என்றார்.

" இல்லமா சாப்பிட்டுதான் வந்தேன் "

" சரி பார்த்து போயிட்டு வாங்க இரண்டு பேரும் " என்றார், அவளோ சரியென்று கீர்த்தீயின் அறைக்கு சென்றாள்...

அங்கே அவள், வொய்ட் டிஸ்ர்ட், ப்ளாக் ஸ்கேர்ட் கழுத்துல பிளாக் ஷாலை சுத்தி போட்டு கொண்டு தயாரானாள்...

" கீர்த்தி போலாமா டி... "

" ஏன்டி கண்டிப்பா போகனுமா, வேற எங்கயாவது போலாம் டி, எனக்கு அதெல்லாம் ஆகாது உனக்கு தெரியும்ல அப்புறம் அங்கயே கூப்பிடுற..... "

" உன்னை கொன்னுடுவேன் நேத்துலருந்து இத தான் சொல்லிக்கிட்டே இருக்க நீ, ஒழுங்கா வந்திரு... "

சக்திக்கு புத்தகம் வாசிக்கிறதுன்னா ரொம்ப பிடிக்கும். ஆன, கீர்த்தீக்கு அப்படி இல்ல. அவங்க அம்மா சொன்னது போலத்தான், படிக்க வேண்டிய புத்தகத்தை, தவர வேற எதையும் தொட மாட்ட, அவளை வம்படியாக சக்தி அங்கே அழைத்து போகிறாள், என்ன நேருமோ ? "

" சக்தி நீ உள்ள போ, நான் வண்டிய பார்க் பண்ணிட்டு வந்திடுறேன். " என்றவள் வண்டியை பார்க்கிங் ஏரியாவிற்கு திருப்ப. " சரி டி சீக்கிரமா வா.... " என்றவள் உள்ளே சென்றாள் .

                 "வருவான்"Where stories live. Discover now