ரகுநாத், கார்த்திக் தெரியாமல், நிச்சதார்த்த ஏற்பாடுகள் ஆரம்பித்திருந்தார்... அவர் கார்த்திக்கை வரவழைக்க, தனது மேனேஜர் மூலமாக நலம் விசாரிக்கும் தன் மகனிடமே, அந்த மேனேஜரை வைத்து தான் இந்த நாடகம்... மேனேஜரிடம் தனக்கு ஹார்ட் அட்டாக், உடம்பு நலம் சரியில்லாம மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக அந்த டாக்டரை வைத்தும் சொல்ல சொன்னார்... அதன்படி அவரும் சொல்ல, தந்தை தவிர வேறெதுவும் முக்கியமில்லை என்று எண்ணியவன் வரேன் என்று கூறினான்.. அவர்களின் திட்டத்தை போலவே நித்தசயதார்த்தன்று வந்தான்.. முதலில் விமானம் தாமதமானது.,, அதன் பின் வந்து இருக்கினான்... அவனை அழைத்து செல்ல அவனுக்காக காத்திருந்தான் ப்ரதீப்.., ப்ரதீப்பிற்கு இந்த திட்டம் தெரியும் என்பதால் அவனிடம் உண்மை கூறாது தனது நடிப்பை தொடர்ந்தான்.. ப்ரதீப்பை கண்டதும் அவனை நோக்கி கார்த்திக் வந்துதான்,., அவன் மேல் கோபம் இருந்தாலும் வேறுவழியின்றி அமைதியாக நின்றான்..
" ப்ரதீப் அப்பாக்கு இப்ப எப்படிடா இருக்கு...."
" ரொம்ப சீரியஸ்ஸா தான்டா இருக்காரு ( தன் பங்கு அக்டிங் போட) வா நம்ம போயிகிட்டே பேசலாம் " என இருவரும் ஏர்போர்டிலருந்து வெளிய வர,அங்கு வந்த ஒருத்தர் கார்த்திக்கை அழைத்தார்..,இருவரும் திரும்பி பார்க்க தனது நண்பன் ஒருவனின் தந்தை தான்.அங்க அவரை கண்டதும் பேச சென்றனர்.
" ஹாய் கார்த்தி உனக்கு இன்னைக்கு நிச்சயதார்தம்ல, நீ இங்க என்ன பண்ற ஒ... இப்ப தான் அமெரிக்கால இருந்து வரியா,சன்தீப்கூட உன்னுடைய நிச்சியதார்ததுக்கு போயிருக்கான்,எனிவேஸ் காங்கராட்ஸ் கார்த்தி...... " என்றார், அவர் கூற கேட்டு அதிர்ந்தவன் ப்ரதீப்பை காண தலைகுனிந்து நின்றான்.. அவனை கண்டதும் தான் விளங்கியது இதெல்லாம் தந்தையின் திட்டம் என்று. " தாங்கஸ் அங்கள்,.. " என்றவன் அவரிடம் விடைபெற்று ப்ரதீப்பை முறைத்துநின்றான்.
" ப்ரதீப், அவர் சொல்லுறதேல்லாம் உண்மையா எனக்கு நிச்சியதார்தமா,அப்பா ஹாஸ்பிட்டல் அட்மிட்டாயிருக்கிறதெல்லாம் பொய்யா, அப்ப என்னை பொய் சொல்லி வர வைச்சிருக்கிங்களா "
YOU ARE READING
"வருவான்"
Romance#2 rank in life #3rank in romance "Hai friends ! இது தான் என்னோட first story so நல்ல இருந்தால் like போடுங்க இல்லேன comment பன்னுங்க" "இது love story தான், நாம் ஹீரோகிட்ட பெட் கட்டி அந்த பெட்ல தோல்வியடைஞ்சாலும் கல்யாணத்துக்கு ரேடியான...