நாட்கள் தன் கடமையை செவ்வனே, என்று கடந்தது. ராஜ் திருமண நாளும் நெருங்கியது, பெண்வீட்டார் விருப்பப்படி தனது கிராமத்திலே திருமணம் என்று முடிவு செய்ய, வேறு வழியின்றி ஒத்து கொண்டனர்..... அதே நேரம் பொங்கல் திருநாளும் வர கீர்த்தீயின் கல்லூரியில் ஒருவாரம் விடுமுறை கிடைத்தது, பொங்கல் திருநாளை கொண்டாடிவிட்டு குடும்பமாய் அங்கே செல்ல தயாராகினர்....
தருண், அஜய் க்கு கிளாஸ் இருந்ததனால், கிருஷ்ணன் மாலதியோடு இருந்துவிட்டனர்.. ஜீவாவும் தனக்கு ப்ராஜட் இருப்பதால் கல்யாணதன்று வருவதாக கூறிவிட்டான்..
ராஜ்வின் குடும்பம், அவனது சித்தப்பா, இரண்டு அத்தைகளின் குடும்பமே. மூன்றுநாள் முன்னமே சென்றது... பெண்வீட்டார் மூன்று நாள் முந்தைய வருமாறு அழைக்க, கிளம்பினர்..
அதே போல் ராஜ்வின் தோழர்கள், ப்ரதீப்,கணேஷ் ,கார்த்திக் , சுரேஷ் அவனுடன் கிளம்பினார்கள்....
பெரியவர்கள் எல்லாம் ஒரு வேணிலும் சிரியவர்கள் எல்லாரும் ஒரு வேணிலும் ஏறினார்கள்.....
கீர்த்தீ ஜன்னலோரம் அமரவே, அவளுக்கெதிராய் கார்த்திக் அமர்ந்துகொண்டான்.... வண்டி கிளம்பியது
" டேய் விஷ்ணு, உன்னோட ஆள எப்போ காட்ட போற, அவங்க அவ்வளவு அழகா என்ன காட்டாவே மாட்டிகிற.... " என்று ஆரம்பித்தாள் கீர்த்தீ....
" ஆமா தேவதை மாதிரி இருப்பா செம அழகு டி அவள பார்த்த நீ எல்லாம் பொறாமை படுவ... " என்றான் விஷ்ணு...
" இவ்வளவு ப்லடப், கொடுக்கிற, அப்ப உன்னுடைய அப்பிளிகேசன் ரிஜட்டட்...."
" ஹேய் அப்படி எல்லாம் சொல்லாத டி உன்ன் நம்பி தான் அவகிட்ட பெருமையா பேசிருகேன் ,நம்ம குடும்பம் லவ்க்கு சப்போர்ட் பண்ற குடும்பம்ன்னு சொல்லிருக்கேன்...
எங்க அண்ணன் கல்யாணம் முடிஞ்சதும் உடனே நம்ம லவ் மேட்டரை சொல்லி, உங்க வீட்டுல வந்து பொண்ணுகேட்கிறேன் சொல்லிருக்கேன், அதுல மண்ணள்ளி போட்டுறாத தெய்வமே....உன்னை விட அழகுல கம்மிதான் உன் அளவு யாரு அழகு இல்ல...... " என்றான் கும்பிட்டுகொண்டே..
YOU ARE READING
"வருவான்"
Romance#2 rank in life #3rank in romance "Hai friends ! இது தான் என்னோட first story so நல்ல இருந்தால் like போடுங்க இல்லேன comment பன்னுங்க" "இது love story தான், நாம் ஹீரோகிட்ட பெட் கட்டி அந்த பெட்ல தோல்வியடைஞ்சாலும் கல்யாணத்துக்கு ரேடியான...