எத்தனை கதைகளும் இலக்கியங்களில் தலைவனின் பிரிவில் வாடும் தலைவியை கண்டிருப்போம்.... இங்கும் கீர்த்தீயின் நிலை அதுவானது..... கார்த்திக்கின் பிரிவை கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்தாள் கீர்த்தீ... காதல் கொண்ட மனதானது தலைவனை எண்ணி வருந்திக்கொண்டிருந்தது....
மறுநாள் விடிந்தது, அர்ஜூன் அவர்களை பீச்சிற்கு அழைத்து வந்திருந்தான்,சக்தியும் அர்ஜூனும் கடலில் விளையாட பார்வையாளராக பார்த்திருந்தனர் கீர்த்தீயும் ஜீவாவும்...
" கீர்த்தீ நேத்து வரைக்கும் அவங்க எவ்வளவு டிஸ்டன்ஸ்ல இருந்தாங்க இப்ப எவ்வளவு டிஸ்டனஸ்ல இருக்காங்க பார்த்தியா. நம்ம சக்தியா இது ஆச்சரியமா இருக்கு "
" நம்ம சக்திதான் ஜீவா. ஏன் அவ லவ் பண்ண கூடாதா ? "
" அப்படி இல்ல சக்தி பசங்ககிட்ட பேசுறதே அபுர்வம் அதுவும் அர்ஜூன்கிட்ட அவ பேசினதே எனக்கு சாக், இதுல லவ் பண்றானா நம்பவே முடியல அவ மாறிட்டா "
" ஏன்டா , அதுக்காக நாங்க பசங்க கிட்ட பேச கூடாதா "
" ஏய் லூசு நான் அப்படி சொல்ல வரல, அவ எப்பையுமே எல்லா பசங்கிட்ட பேசுவான்ன ஒன்னுல பிரச்சினை, இல்ல ஆனால் இப்ப கொஞ்ச நாள தான் கார்த்தி கூட பேசுற, அதுவும் அர்ஜூன் கூட நேத்து தான் பேசு ஆரம்பிச்ச அதான் அப்படி சொன்னேன் "
" அவள் கொஞ்சம் சைய் டைப்னு உனக்கு தெரியாத விடு இப்படியாவது கொஞ்சம் அவ கூச்சத்தை குறைக்கட்டும் "
" ஹேய் இரண்டு பெரும் அப்படி என்ன டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கீங்க " சக்தி வந்தாள்..
" அதுவா நேத்து நைட்டு வந்த ஒரு நியூஸ் பத்தி பேசிட்டு இருந்தோம் "
" அப்படி என்ன நியூஸ் அது "
" சக்தி என்ற பெண் நேற்று இரவு அர்ஜூனின் காதலை ஏற்றுக்கொண்டாள், அவள் ஏற்றுக் கொள்ள காரணம் என்ன குற்றமும் பின்னனியும் என்ன? அந்த நியூஸ் பத்திதான் பேசிட்டு இருக்கோம் "
" டேய் உங்கள..... சரி அப்படி என்ன தான் பேசினீங்க "
" இல்ல காதல்னாலே காயிச்சல்வரும் சக்திக்கு இன்று காதலன்னுடன் கடற்கரையில் விளையாடுவது எப்படி ? "
YOU ARE READING
"வருவான்"
Romance#2 rank in life #3rank in romance "Hai friends ! இது தான் என்னோட first story so நல்ல இருந்தால் like போடுங்க இல்லேன comment பன்னுங்க" "இது love story தான், நாம் ஹீரோகிட்ட பெட் கட்டி அந்த பெட்ல தோல்வியடைஞ்சாலும் கல்யாணத்துக்கு ரேடியான...