கார்த்திக் யாரிடமும் சொல்லாமல் அமேரிக்கா சென்றது வருத்தமாக தான் இருந்தது, எதற்காக யாரிடமும் சொல்லாமல் செல்லவேண்டும்.... அன்று அவள் பேசியதால் அவன் விலகி சென்றானா ? ஏன் தன் நண்பர்களிடம் கூட கூறாது அமெரிக்க செல்ல வேண்டும்... என்ன பிரச்சினை என்று யோசித்தவாறே வீட்டிற்கு வந்தாள்.. அங்கே அனைவரும் கூடியிருக்க, ஜீவாவும் கீர்த்தீயும் வருவதை கண்டனர்.. கீர்த்தீ அவர்களை கண்டும் தன் வீட்டிற்கு சென்றாள்...
" குட்டிமா நாங்க எல்லோரும் இங்க உட்கார்ந்து இருக்கோம் நீ பார்த்து பார்க்காமா போறீயே மா "
" அப்பா அது வந்து..... "
" நீவாமா வந்து உட்காரு " அவர் பக்கத்தில் அமர்த்திக்கொண்டார்...
" எங்கமா போயிட்டு வர, ஏன்மா இப்படி இருக்க, உன்னை இப்படி பார்க்க கஷ்டமா இருக்கு.., நீ சந்தோசமா இருந்து எங்களையும் சந்தோஷ்படுத்துவ, இப்ப நீயும் சந்தோசமா இல்ல உன்னால நாங்களும் சந்தோசமா இல்ல... எப்படி கலகல இருந்த வீடுமா இது எப்படி கலையிலந்து போயிருக்குபாரு. நீ ஒழுங்கா பேசி எவ்வளவு நாள் ஆச்சு , இப்படி இருக்காத, அப்பாகிட்ட உன்னுடைய பிரச்சினை சொல்லாம இருந்ததே இல்லையேமா இப்பெல்லாம் அப்பாகிட்டேயே பேசுறதே இல்ல,கஷ்டமா இருக்குமா....."
" என்ன மன்னிச்சுருங்கப்பா என்னால முடியல, நான் கார்த்திய லவ் பண்றேன், அவன் கிட்ட காதல சொல்ல முடியாமா தவிச்சுகிட்டு இருக்கேன்.... அவன பார்க்காம என்னால இருக்க முடியல. அவன் என்ன வீட்டு ரொம்ப தூரம் போயிட்டான்.... எங்கிட்ட சொல்லாம அவன் அமேரிக்கா போயிட்டான், அவன் அமேரிக்காவுக்கு போறேன்னு எங்கிட்ட போன் பண்ணிக்கூட சொல்லலப்பா,அவன் ப்ரண்ஸ்கிட்டகூட சொல்ல,, அவன்கூட வாழனும் ஆசைப்படுறேன்,ஆனால் அவ என்னவிட்டு விலகிபோறான் தோணுதுப்பா,என்னால சரியா சாப்பிட முடியல தூங்க முடியல எதையோ இழந்த மாதிரி பீல் பண்றேன் என்ன இப்படி புலம்ப விட்டுட்டு போயிட்டான்ப்பா."
" அவன் அமேரிக்கா போனது உனக்கு எப்படிடா தெரியும்...,"
" அப்பா நாங்க கார்த்தி வீட்டுக்குப் போனோம்.,. அங்க அவன் அப்பா தான்பா சொன்னார்,..அவர் வேற யாரும் இல்ல பெஸ்டிவல்ல பார்த்தேன் சொன்னேல ரகுநாத் பிஸ்னஸ்மேன் அவர்தான் கார்த்தியோட அப்பா.. " என்றவள் அனைத்தையும் கூறினாள்..
YOU ARE READING
"வருவான்"
Romance#2 rank in life #3rank in romance "Hai friends ! இது தான் என்னோட first story so நல்ல இருந்தால் like போடுங்க இல்லேன comment பன்னுங்க" "இது love story தான், நாம் ஹீரோகிட்ட பெட் கட்டி அந்த பெட்ல தோல்வியடைஞ்சாலும் கல்யாணத்துக்கு ரேடியான...