அங்கே அந்த மாலில். டெடிசாப்பில் வித விதமாக டெடி பொம்மைகளும் நிறைய பொம்மை வகைகளையும் வைத்திருந்தனர், குழந்தைகளுக்கு தேவையானஅத்தனை விளையாட்டு பொருட்களும் அங்கே இருக்க நிறைய குழந்தைகள் அங்கே தாய், தந்தையோடு அதனை வாங்கிகொண்டு இருந்தனர்,... கீர்த்தீ அங்கே அழகான ரோஸ் நிற டெடி ஒன்றை வாங்கி வைத்துவிட்டு வேற எதையோ அங்கே பார்க்க செல்ல, அந்த டெடியை ஒரு குழந்தை எடுத்து பார்த்து கையில் வைத்திருந்தது, அந்த குழந்தையின் அம்மா குழந்தையை அழைக்க, அதை கீழே போட்விட்டு ஓடியே போனது. அதை பார்க்காது அங்க வந்த ஒருவன் அதனை மித்து விட்டு, அதை தனது காலால், ஓரமாக தள்ளிவிட்டு சென்றான், கீர்த்தீ அதை பார்த்துவிட்டாள்.
" யோவ் ! கண் தெரியாத உனக்கு , கீழே என்ன கிடந்தாலும் அது எடுத்து வைக்கன்னும் ஸ்சென்ஸ் வேணா, அப்படி எரி மிதிச்சுட்டு போயிட்டே இருப்பீயா... "" ஹாலோ ! மைன்ட், யூர் வோர்ஸ். நான் அத பார்க்கல தெரியாம மிதிச்சுட்டேன் அதுக்கு மரியாதை இல்லாம பேசுவீங்களா. "
" இங்கபாரு உன்னுடைய ஸ்ஸூவோட அச்சு, இது எப்படி போகும் என் டெடிய அசிங்க படித்திட்டு சாரிகூட கேட்காம எவ்வளவு திமிரா பேசுற நீ...."" ஹலோ மரியாதையா பேசுங்க நானும் அப்பதலிருந்து பார்த்திட்டே இருக்கேன் மரியாதையில்லாம பேசுறீங்க. "
" உனக்கு என்னடா மரியாதை மிதிச்சுட்டு எதுவும் நடக்காத மாதிரி போற, "
" என்னது " டா " வா, நீ ரொம்ப பேசுற"
" அப்படி தான் பேசுவேன் என்ன பண்ணுவ நீ...." அவனை முறைத்து நின்று சண்டை போட்டுகொண்டிருந்தாள், அங்கே அனைவரும் இவர்களின் சண்டை தான் பார்த்துகொண்டிருந்தனர்..
" டேய் எல்லாரும் பார்க்கிறாங்கடா வா போலாம் " தன் நண்பன் பிடித்து இழுத்தான்.
" இருடா, இவள ஒரு வழி பண்ணாம விடுமாட்டேன் டா, என்னையவே மரியாதை இல்லாம பேசுறா... "
என்னாடா, பண்ணுவ உன்னால என்ன பண்ணமுடியும்.. "
" உன்னை.... " அவளை அடிக்க செல்ல, அவனது நண்பன் அவளை பிடித்து இழுத்து, " சாரி சிஸ்டர், நான் அவனுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன், சாரி.... " என்றவன், அவனை இழுத்துகொண்டு போனான்.
YOU ARE READING
"வருவான்"
Romance#2 rank in life #3rank in romance "Hai friends ! இது தான் என்னோட first story so நல்ல இருந்தால் like போடுங்க இல்லேன comment பன்னுங்க" "இது love story தான், நாம் ஹீரோகிட்ட பெட் கட்டி அந்த பெட்ல தோல்வியடைஞ்சாலும் கல்யாணத்துக்கு ரேடியான...