ஆர்த்தீயின் பிறந்தநாள் விழாவிற்கு, சக்தி, சனா, கீர்த்தீ சென்றனர்..... அங்கு கீர்த்தீயின் கண்களை யாரோ பொத்திவிளையாட யாரென்று அறியாமல் நின்றாள்.....
" யாரது, கண்ண பொத்தினது, யாருன்னு சொல்லுங்க, இல்லன்னா கையை எடுங்க நானே பார்த்து யாருன்னு சொல்றேன். " என்றாள், அவள் கண்ணிலிருந்து கையை எடுத்திட யாரென்று திரும்பி பார்த்தாள், அது அர்ஜூன் தான்.
"ஹேய் அர்ஜூன் இங்க என்னடா பண்ற.... " என்றவளின் கண்ணில், ஆச்சரியம் மின்ன,
" ஹாங்.... என் வீட்டுல நான் இல்லாம நீயா இருப்ப....."
" எது, இது உன்னுடைய வீடா, அப்ப நான் அட்ரஸ் மாத்தி வந்துடேன்னா ? ... " என குழம்பி நின்றாள்..
" அடலூசு, அட்ரெஸ் எல்லாம் மாத்தி வரல சரியான இடத்துக்கு தான் நீ வந்திருக்க.... " என்றான்.
" அப்ப ஆர்த்தீ.... இது ஆர்த்தீ வீடுதானே ! "
" ஆமா, இது ஆர்த்தி வீடுதான் ஆர்த்தீ என்னுடைய தங்கச்சி தான் .... " என்றான்.
" அடப்பாவிங்களா ! இவ்வளவு பெரிய அண்ணன் இருக்கான்னு அவளும் சொல்லல, உனக்கு தங்கச்சி இருக்கான்னு நீயும் சொல்லல ப்ராடுகளாக, அப்ப சண்டை போட்ட அப்ப, கூட தெரியுமா நான் ஆர்த்தீ பிரண்ட்ன்னு...."
" ம்... தெரியும் காலேஜ் முதல் நாள் இருந்து இப்பவரைக்கு நீ பண்ற எல்லா விசயத்தையும் சொல்லிட்டா, உன்னுடைய புராணம் தான், எங்க வீட்டுல நீ அத பண்ண இத பண்ண சொல்லியே வீட்ட ஒரு வழி பண்ணிருவா .... " என்றான்..
" சரியான ஓட்ட வாயி என்பத்தி எல்லாதையும் சொல்லிட்டா. ஆனால் அந்த வாயாடி அவ குடும்பத்தை பத்தி சொல்லவே இல்லையே, வரட்டும் அவளுக்கு இருக்கு...... " என்று இருவரும் பேசிக்கொண்டிருக்க..
பாவம் சக்தி, சனவோ மொழி தெரியாத படத்திற்கு வந்தவர்களை போல புரியாமல் நின்றனர்..." ஹேய் சாரி, சக்தி, சனா, இது அர்ஜூன் ப்ரண்டு, என்னுடைய பாஸ் அப்புறம்.... " என முடிப்பதற்குள் சனவே,
" அப்புறம் உன்கூட சண்டை போட்டவர் அதானே....." என்றாள்.
VOUS LISEZ
"வருவான்"
Roman d'amour#2 rank in life #3rank in romance "Hai friends ! இது தான் என்னோட first story so நல்ல இருந்தால் like போடுங்க இல்லேன comment பன்னுங்க" "இது love story தான், நாம் ஹீரோகிட்ட பெட் கட்டி அந்த பெட்ல தோல்வியடைஞ்சாலும் கல்யாணத்துக்கு ரேடியான...