கல்யாணம் முடிந்து மூனு மாதம் ஆன நிலையில் கவிதாவிற்கு தாலி பெரு நிகழ்வை வைத்தனர்,. அங்கே மொத்த குடும்பம் கூடியது... கீர்த்தீயும் அவள் அன்னையும் அங்கே சென்றனர்,.. ராஜ் கண்டிப்பாக தனது நண்பர்களை அழைத்திருப்பான் என்றெண்ணியவள், கார்த்திக்கை பார்த்து பேசவேண்டும் என்று ஆவலாய் கிளம்பினாள்... அங்கே கீர்த்தீயின் முழுகுடும்பம் கூடியிருக்க, கீர்த்தீக்கு ஏதோ தனித்து விடபட்டது போல இருந்தது.... " ராஜ் உன் ப்ரண்ட்ஸ் வந்திருக்காங்க பாரு.. " குரல் கேட்கதும் வேகமாக வாசலை நோக்கியவளுக்கு ஏமாற்றமே... வந்ததும் ப்ரதீப், கணேஷ்ஷூம் தான்... அவளை கண்டதும் ப்ரதீப், கணேஷ் சினேகமாய் சிரிக்க, கீர்த்தீயும் கஷ்டபட்டு சிரிப்பை வரவழைத்தாள்... அவர்கள் மட்டும் வர அவர்களை தாண்டிதேடினாள்...
" யார தேடுர கீர்த்தீ....."" யாரையும் இல்ல ப்ரதீப் அண்ணா நீங்க இரண்டு பேறும் எப்படி இருக்கிங்க ......"
" நாங்க நல்லா இருக்கோமா நீ எப்படிமா இருக்க..... "
" இருக்கேன் அண்ணா " என்றவளின் பதிலில் உயிர்ப்பு இல்லை.... எதையோ கேட்க எண்ணியவள், தயங்கி உள்ளே சென்றாள்... அவளின் செய்கை ப்ரதீப்பிற்கு புரியாமல் இருந்தது...
கவிதாவை அமர்த்தி, தாலியில் காசு குண்டு என கோர்த்து பெரியவர்கள் சேர்ந்து சடங்களை செய்தனர்.. அங்கே சிரிப்பு கேலியுமாக இருக்க, கீர்த்தீ தனித்தே இருந்தாள்... அங்கே அனைவரும் சாப்பிட்டனர்,. ப்ரதிப் கிளம்பிடும் போது அவனிடம் வந்தாள் கீர்த்தீ..." அண்ணா உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்னா..... "" சொல்லுமா என்ன பேசனும்.. "
" அண்ணா அது வந்து கார்த்தி எங்கண்ணா போனா, எப்ப அவனுக்கு போன் பண்ணாலும் ஸ்விட்ச் ஆப்ன்னு வருது , அவனை இப்பெல்லாம் பார்க்கவே முடியல எங்க தான் அண்ணா போனான்,.... அவன் எங்க போயிருக்கான்னு உங்களுக்கு தெரியுமா தெரிஞ்சா சொல்லுங்க....... அவன் இப்ப எங்க இருக்கான் அண்ணா......."
" கார்த்தி எங்க இருக்கான்னு தெரியலமா
நாங்க அவனை பார்த்தே ஒன்றை மாசம் ஆயிருச்சுமா, அவன் எங்ககிட்ட இப்படி நடந்து கிட்டேதே இல்ல, எங்ககிட்ட பேசாமா இருந்ததும் இல்ல. எங்கள பார்த்து பேசிட்டு தான்மா வீட்டுக்கே போவான் . இல்லைன்னா, போன் பண்ணி விசாரிக்காமா இருக்க மாட்டான்ம்மா, அவன நினைச்சா எங்களுக்கு கொஞ்சம் பயமாதான் இருக்கு, அவன் வீட்டுக்கு போயிக்கூட பார்த்துட்டோம், அவன் வீட்டுல யாருமே இல்ல அவன் அப்பாகூட வேலை விசயமா வெளியூர் போயிட்டாருன்னு வாட்ச்மேன் சொன்னார்... ஆனால் அவன் எங்க போயிருக்கான்னு அவருக்கே தெரியல.அவன் மட்டும் கையில கிடைச்சான் அவ்வளவு தான் நாலு மிதிமிதிச்சு எங்கள விட்டு எங்கடா போன கேட்டாதான் எங்களுக்கு எங்க கோபம் அடங்கும், அவன் மேல அவ்வளவு கோபமா இருக்கோமா,ஆமா நீ ஏன் அவன பத்தி விசாரிக்கிற அவங்கிட்ட எதாவது சொல்லனுமா......"
YOU ARE READING
"வருவான்"
Romance#2 rank in life #3rank in romance "Hai friends ! இது தான் என்னோட first story so நல்ல இருந்தால் like போடுங்க இல்லேன comment பன்னுங்க" "இது love story தான், நாம் ஹீரோகிட்ட பெட் கட்டி அந்த பெட்ல தோல்வியடைஞ்சாலும் கல்யாணத்துக்கு ரேடியான...