அர்ஜூன், கீர்த்தீயிடம் பூவை கொடுத்து ஐ லவ் யூ என்றான்.. அவளும் அந்த பூவை வாங்கிகொண்டு அவனிடம் ஐ டூ லவ் யூ என்றவள் கூற கார்த்திக்கின் இதயம் உடைந்து தான் போனது, கண்கள் கலங்கியது, அடுத்து அவர்கள் பேசுவதை கேட்க, சக்தி இல்லாதவனாய் அவ்விடம் விட்டு சென்றான். அவன் அவர்கள் பேசுவதை முழுதாய் கேட்டிருந்தால், இந்நேரம் கதை மாறிருக்கும், பொறுமையின்றி அவன் செல்ல விதி தன் விளையாட்டை ஆரம்பித்தது..
" ஹேய கீர்த்தீ உண்மையாவே என்னை லவ் பண்றீயா "
" போடா ப்ராடே ! இன்னைக்கு ஏப்ரல் ஒன்னு ப்பூல் டேன்னு நல்லாவே தெரியும் நீ என்னை ஏப்ரல் ப்பூல் பண்ண தானே என்னை லவ் பண்றேன்னு சொன்ன " என்றதும் அசடு வழிந்தான்.." ஹிஹி ஹிஹி...... கண்டுபிடிச்சிடீயே, அப்ப ஏன் நீ ஐ டூ லவ் யூ சொன்னடி. "
" நானும் உன்னை ப்பூல் பண்ண தான் அப்படி சொன்னே " தனது ஒற்றை புருவத்தை தூக்கி காட்ட...
" அடிப்பாவி, நான் உன்னை ஏமாத்த வந்தா.நீ என்னை ஏமாத்திட்டியே,சரி , எப்படி கண்டுபிடிச்ச நான் சொன்னது பொய்யின்னு..."
" ஹாஹாஹா...... அதுவா, நீ லவ் சொல்லும் போது உன்னுடைய கண்ணுல காதலே இல்ல வெறும் ஏமாத்திற எண்ணமும் கேலியும் சிரிப்புதான் இருந்தது, யோசிச்சேன் இன்னைக்கு வேற ஏப்ரல் ப்பூல் வேற, ஹெஸ் பண்ணது கரேட்டா போச்சு "
" ராட்சஷி, ஹெஸ் தான் பண்ணியா நான்
தான் உளறிடேனா. சரி அப்ப நான் யாருகிட்டயாவது லவ் சொல்லும் போது என் கண்ணுல காதல் தெரியாதா " என்றான்.." லூசாடா நீ , ஏமாத்த நினைச்சா உன் கண்ணுல எப்படிடா காதல் தெரியும், நீ உண்மைய லவ் பண்ணி, ப்ரோபோஸ் பண்ணிருந்தேனா அப்ப அந்த பொண்ணுக்கு உன்னோட காதல் உன் கண்ணுல தெரியும், ஆமா இதையேன் கேட்கிற, ஒருவேள நீ யாரையாவது லவ் பண்றீயா " என்றவள் கேட்க, வெட்கம் கொண்டான்...
" நீ என்ன வேணும்னாலும் பண்ணு, தயவு செய்து வெட்கம் மட்டும்படாத பார்க்க சகிக்கல.. " என்றாள் முகத்தை அஷ்டகோணலாக வைத்து.... அதை கண்டவனோ முறைத்தான்...
" சரி, நீ யாரா லவ் பண்ற " என்றதும் கொஞ்சம் தயங்கினான்...
" அது வந்து..... அது வந்து..... " என்று இழுத்தான்.." டேய் இப்ப நீ சொல்லல நான் எந்துருச்சு போயிருவேன் " என்றாள்.
CZYTASZ
"வருவான்"
Romans#2 rank in life #3rank in romance "Hai friends ! இது தான் என்னோட first story so நல்ல இருந்தால் like போடுங்க இல்லேன comment பன்னுங்க" "இது love story தான், நாம் ஹீரோகிட்ட பெட் கட்டி அந்த பெட்ல தோல்வியடைஞ்சாலும் கல்யாணத்துக்கு ரேடியான...