"விழிகளை
திறக்கமறந்த
என்னை
மின்மினியாய்
இமைக்க வைத்தவள்
நீ!வாய்திறந்து
பேச தவித்த
என்னை
வாய்விட்டு
சிரிக்க வைத்தவள்
நீ!வேலையாய் தள்ளிநின்ற
உன்னை!
வந்துசேர்ந்திட
முயற்ச்சித்து முடியாத
என்னை !
வாய்விட்டு
அழவைத்தவளும்
நீ!மனதில் நினைப்பதை
விழிகள் பார்ப்பதை
மறுநிமிடம்
என்
காலடி சேர்த்தவள்
நீ!பசி
என்று வாய்திறக்கும்
முன்னரே
என்
வயிறு நிரப்பியவள்
நீ!என்
தேவைகளை
நான் அறியும்முன்னரே
ஒன்றுவிடாமல்
பூர்த்தி செய்தவள்
நீ!பத்திரமாய்
பத்து மாதங்கள்
பல விரதம்இருந்து
உடல்வலியை
மனவலிமையால் புறந்தள்ளி,
என்னை
கருவறையில் இருந்து
இழுத்துவந்தவள்
நீ!உன்னை
முழுதாய் தொழுக
ஒரு ஜென்மம்போதாது!
எனக்கு
உயிர் தந்து
இந்த உலகத்தில்
அறிமுகம் செய்தவள்
நீ!"அம்மா "
என்னும் மூன்றெழுத்து
சொல்லில்
என்னை
சுற்றிவரும் கடவுள்
நீ! ""நீ "முடியாதவள் அடுத்த பகுதியில் தொடர்பவள்.
இந்த வையத்தில் குழந்தையை ஈன்ற ஒவ்வொரு தாய்க்கும் சமர்ப்பணம்.
To be continued in next episode
- தர்ஷினிசிதம்பரம்