புலம்பெயர் தமிழனே
அவன் வாழும் நாட்டில்
மதிப்பாய் வாழ்ந்திருக்க...இங்கோ,
இயற்கை (மழை)
ஒருபுறம்
பாராமுகமாய் வதைத்தெடுக்க,
மறுபுறம்
மக்களின் நல்லதென்று
ஒன்றும் நமக்கு உதவாத
ஊரே மெச்சிடும் சாலையாம்
அதை போட்டிட,
எம்
விவசாயிகளின் நிலத்தை
அபகரித்து
பிழைக்க வழியில்லாமல்
நம் மண்ணிலேயே
அகதியாய் வாழும்
நிலைகண்டு ஏதும்
செய்ய முடியவில்லையே
என்று வெதும்பும்
உள்ளங்கள் எத்தனையோ?
அதில் எனதும்
அடங்குமன்றோ?..-தர்ஷினிசிம்பா