"பரந்து விரிந்து
விழுதுகளோடு நிழல் தரும்
ஆலமரம் தந்தை என்றால்....நாமெல்லாம்
அதில் காய்க்கும்
காய் கனிகளென்றால் ......நம்
எல்லோரையும்
இழுத்துபிடித்து
வேரூன்றி நிற்பது
ஆணிவேராகிய
நம் தாயாகும் .....!வேர் இன்றி
மரம் இல்லை....
மரம் இன்றி....
காயும் இல்லை....
கனியும் இல்லை...நமக்கு தேவையாவும்
முடிந்த பின்
வயதான
கிளை தானே!
வேர் தானே!
என்று விட்டுவிட்டால்
நாளை நாம்
ஆட்டம் கண்டுவிடுவோம்....!நாளை நம்முடைய
நிலையை கவனத்தில் கொண்டு
எந்த செயலையும்
செய்யலாம்...."
- தர்ஷினிசிதம்பரம்