"
"ஆ...."
என்ற அலறலோடு
என் கையில் இருந்த
பாத்திரம் கீழே விழ!ஒன்றுமே அறியாத
சிறுவன் போல்
டிவி பார்த்துக்கொண்டிருக்கிறாய்
என்
இடையை கிள்ளிவிட்டு
ஓடிவந்த நீ!உள்ளே பூஜை அறையில்
இருந்து குரல்
மட்டும் வரும்
"என்னம்மா ஆச்சு?""Onnumillai அத்தை!
திருட்டுப்பூனை
உள்ளே வந்துருச்சு !"
என நான் கூற"அந்த மத்து எடுத்து
மண்டையில் ஒன்னு
போடும்மா!"
என்று கேட்டவுடன்மல்லிகை பூவாய்
மலர்ந்ததேன் முகம்,
முத்துக்களாய் சிதறியது
என்
சிரிப்பு !"- தர்ஷினிசிதம்பரம்