"நீ
என்னுள்
வந்தநாள் முதல்!என்
இயல்புகளை
இழந்துவிட்டேன் என்பதைவிட
துறந்துவிட்டேன்!எனக்கு பிடித்த
உணவை துறந்துவிட்டு
உன் விருப்பத்திற்கு
உன்ன ஆரம்பித்தேன்!எனக்கு பிடித்த
உடைஉடுத்துவதை விட்டுவிட்டு
உன் விருப்பத்திற்கு
உடுத்த ஆரம்பித்தேன்!எனக்கு பிடித்த
நேரத்தில்உறங்குவதை விட்டுவிட்டு
உன் விருப்பத்திற்கு
உறங்கவும் ஆரம்பித்தேன்!எனக்கு பிடித்த
seiyalgalai விட்டுவிட்டு
உன் விருப்பத்திற்கு
செயல்பட ஆரம்பித்தேன்!என் மூச்சினில்
உன் மூச்சு
கலந்த பிறகு
உன் விருப்பத்தின்படி
மூச்சையும் சுவாசித்தேன்!எனக்குள்
நீ
செய்யும் சேட்டைகளை
மனமகிழ்ந்து ரசித்தேன்!உன்னால்
என் எடையும்
கூடிக்கொண்டே போனது!என்னுள்
இருந்து
புது ஜீவனாய்
நீ
வெளிவரும் நாளை
எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
உனக்காக!"-தர்ஷினிசிதம்பரம்
