சாப்பிடும்மா!

29 7 7
                                    

"ஆயிரம் கோடி கொட்டி கொடுத்தாலும்,
  அந்த பாற்கடலின்  அமுதமே  தந்திட்டாலும்,
"நில்லும்மா இன்னும் ஒரு வாய்!"
  என்று கையில் தட்டோடு
  படிக்கும்  காலத்தில் நீ
  என் பின்னே ஓடிவந்த நாளும் வருமோ?.....

"மணி பத்து ஆச்சு இன்னும் எப்போ சாப்பிடுவ?"
என்று சாம்பாரையும்  அரைத்து  வைத்த சட்னியும் சாதத்தோடு.....
உன் கையால் பிசைந்து  பந்துபோல் 
உருண்டை உருட்டி"சாப்பிடும்மா!"
என்று ஊட்டிய என் தாயின் கரங்களில்
அதே உருண்டை கவளத்தை 
உண்ணும் நாள் திரும்பவும் வராதோ?..
என ஏங்கும் திருமணமான ஒவ்வொரு
பெண்ணிற்கும் இவ்வரிகள் சமர்ப்பணம் !"

                                 -,தர்ஷினிசிதம்பரம்                  

அன்பின் வெவ்வேறு வடிவங்கள் 2 Donde viven las historias. Descúbrelo ahora