காலை விடிந்ததற்கான அறிகுறியாய் சிட்டுகுருவியும் மற்றபறவைகளும் கானமிசைக்க... சூரியன் தான் வந்துவிட்டதை உணர்த்துமாரு தனது கிரணங்களை ஐன்னலினுள் செலுத்த... ஏனோ தூக்கம் கலைவதாய் உணர்ந்த நம் கதையின் நாயகி பெட்சீட்டை இழுத்து முகம் வரை மூடி தூக்கத்தை தொடர்ந்தாள்.
இருபத்திரண்டு வயது பி.இ இறுதியாண்டு தேர்வு எழுதி முடித்திருக்கிறாள், ரிசல்டுகாக வெய்டிங் பா.ஊரிலிருந்து வந்திருந்த அவளின் பாட்டி அவளை வந்து ராசாத்தி ராசாத்தி என எழுப்ப... காலையிலே வண்டு வேலைய ஸ்டார்ட் பன்னிடுச்சுபோல என தன் மல்லிகா பாட்டியை சொல்லிக்கொண்டு எழுந்தாள்.
வீட்டுல இருக்கறதுனால சரியான சோம்பேறி ஆகிட்ட நீ.... கிழம்பி வந்து வீட்டு வேலையெல்லாம் கத்துக்கோ என அவளை எழுப்பினார்.
இந்த அம்மாயி வேற, எதோ எனக்கு வேல தெரியாத மாதர திட்டிகிட்டு இருக்கு...
பின்ன காட்டு வேல நல்லாவும் வீட்டு வேல ரொம்ப கொஞ்சமா தெரிந்த நம்ம ஹீரோயின திட்டுனா கோபம் வருமா வராதா... நீங்களேசொல்லுங்க. ஆமாங்க எக்ஸாம் முடிந்சதுலருந்து நம்ம மேடம் பிரிதான... அதனால அப்பாகூட போய் வழக்கம்போல விவசாயத்துல உதவுறாங்க.. ஆனா வீட்டு வேல கொஞ்சம் இல்ல கொஞ்சம் அதிகமா வளையாதுதான்.பின் நன்றாக உறங்கி கொண்டிருந்த தன் தங்கையையும் எழுப்பினாள்.
ஓய் மேடம் இன்னைக்கு உனக்கு காலேஜ் போக முதல் நாள் கிழம்புற ஐடியாவே இல்லயா மேடம்கு...
இவ வீட்டோட கடைகுட்டி... ஈஈஈஈனு சிரிச்சுகிட்டே எழுந்தாங்க... மேடம் இரண்டாவது வருசம் அடியெடுத்து வைக்கறாங்க... பி.எஸ்.சி மேத்ஸ். பத்தொன்பது வயது... மணி ஏழு ஆனத பார்த்ததும் படபடனு எழுந்து கிழம்பி ரெடி ஆகிட்டா... இந்த இரண்டு குழவானுங்களும் மாடில இருக்க ரூம்லதான் இருக்காங்க... படிக்கற வேல அதிகமா இருந்ததால இரண்டு ரூம் கொடுத்தாங்க ஆன படுக்கும்போது ஒன்னாதான் உருண்டு கிடபாங்க....சரி கீழ வந்தா... கனகவள்ளியம்மா வீட்டு பெரியவங்களுக்கு சாப்பாடு பரிமாறிகிட்டு இருந்தாங்க. நம்ம சிறுசு அம்மா டைம் ஆகுது பவி என ஆரம்பித்தவள் ஏதோநினைதஅதவளாக ... ஓ மை காட்.. என் பிரண்டு வேற வெய்ட் பன்னுவா.... சீக்கரம் எல்லாம் போட்டுதாம்மா....
ஹே என்னாடி நீ இப்டிதான் அவசரபடுத்துவனு எல்லாம் ரெடி பன்னி வச்சுட்டுதான வந்துருக்கேன் சமயலறையில போய்கூட எடுத்து வச்சுக்க முடியாதா.... - கனகவள்ளி.
வழக்கம்போல தனது அசட்டு சிரிப்பை சிறித்து அனைத்தையும் எடுத்து வைத்துகொண்டாள்.
YOU ARE READING
நெஞ்சாங்கூட்டில்
RomanceHi friends.... இது என்னுடைய இரண்டாம் படைப்பு... என்னுடைய முதல் கதை நினைவெல்லாம்நீயேவிற்கு ஆதரவளித்து எனக்கு எழுத ஊக்கம் தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி... நீங்கள் எனக்களித்த ஆதரவினால்... உங்களின் விருப்பத்திற்கினங்க... இதோ நெஞ்சாங்கூட்டில் உங்...