பகுதி-20

3.2K 146 7
                                    

கடவுளே இன்னும் ஊருக்கு கிளம்ப மூனு நாள் இருக்கு பாட்டியும் வரல... நா எப்படி தனியா ரூம்லயே அடஞ்சு கிடக்க... என யோசித்தபடியே இருந்தவள் ச்ச அந்த சிருசுங்களுக்கு கால் பன்னலாமுன்னா எல்லாம் கலேஜ்ல இருகுங்க.... சரி வீட்டுக்கே பன்னுவோம்...

அழைப்பு மணி அடித்துக்கொண்டிருக்க... அதை வேகமாக வந்து எடுத்தார் நம் கனகவள்ளி... சிவாவின் அழைப்பை பார்தத்தும் வழக்கம்போல நல விசாரிப்புதான்...
அம்மா டெய்லி பேசறேன் டெய்லியும் இதேதான் கேப்பிங்களா... நா நல்லா இருக்கேன்மா...
அது இல்லடா செல்லம் சின்ன வயசுலருநதே உன்ன பார்க்காம இருந்ததில்ல .. அதான்...

போதும் கனகு டார்லிங்...இன்னும் மூனே நாள் நான் அங்க வந்து நிக்க போறேன்...
சரிடா சரிடா... அப்றம் ராம் தம்பி ஆபிஸ் கிளம்பிட்டாரா...
ஹிம் கிளம்பிட்டாரு உன் அருமை மருமகன்... என சலித்துக்கொண்டு கூறினாள்...

என்ன மருமகளே இவ்ளோ சலிப்பு... என் பயன் என்ன அவ்வளோ கொடும படுத்தறானா உன்ன.... என ராமின் சித்தி சகுந்தலா கேட்க... அடடே இத எப்படி மறந்தேன்... நான் கால் பன்னாலே லவ்ட் ஸ்பீக்கர்ல போட்டு என்ன கலாய்கறதே வேல இவங்களுக்கு இதுல அம்மாவும் கூட்டு... எல்லாம் கூட்டு களவாணிகளா இருக்குங்க என நினைத்தவள்...
அதில்ல குட்டி மாமியாரே... சும்மா சொல்லி பார்த்தேன்.... என்ன அனுப்பி விட்டுட்டு ஜாலியா லூட்டி அடிக்கிறிங்க எல்லாரும் உங்கள வந்து பேசிக்குறேன்...என்றாள்.
ஆம் சிறு வயதிலிருந்து அறியாமல் இருந்தாலும்... அவர்கள் இத்தனை நாட்கள் பேசியதிலே தன் மருமகளை மகளாகவும் தோழியாகவும் ஏற்றனர்... அவள் உடனே சென்றதால் நேரில் அவர்கள் பாசத்தை அனுபவிக்க முடியாமல் போனதே தவிர... தினமும் உரையாடாமல் அவளை விட்டதில்லை இவர்கள்....
சரி சரி குடுங்க அந்த வாலுகிட்ட நானும் இரண்டு வார்த்த பேசுறேன்... என்று சுசீலா போனை வாங்கினார்...
சிவா கண்ணா ராம் எப்படி இருக்கான்...
அத்த இது சீட்டிங் எங்கிட்ட பேசறப்போ  பர்ஸ்ட் என்ன கேட்காம உங்க பயன கேட்கறிங்க... உங்க மக மகனு சொல்லிட்டு ஓரவஞ்சன ... ஹிம் என இழுத்தாள்...
அட வாலுஂ.. உன்கிட்ட என் மகன்தான் கஷ்டபடனும் உன்ன பத்தி அண்ணி எல்லாமே சொல்லிட்டாங்க... சரியான சேட்டையாமே நீ... அவளுக்கல்லவா தெரியும் இங்கிருக்கும் நிலமை... அப்படியே எதிர்மறையானது .. அவளது வாலு தனத்தை மூட்டைகட்டி வைத்துள்ளாள் என்பது...
பின் பாட்டி பேச... கிழவி என்ன தள்ளிவிட்டுட்டு எப்படி பேசுது இப்ப... நான் போய் வச்சுகிறேன்... அப்போ சோகமா இருந்ததால விட்டுட்டேன் இரு வரேன் என நினைத்தவள் அவரிடமும் மற்றவர்களிடமும் பேசிவிட்டு மல்லிகா பாட்டியிடம் மறக்காமல் காமாட்சி பாட்டி பற்றி கூறிவிட்டு....
தன் தந்தை வந்தவுடன் அவரிடமும்
மற்றவர்களிமும் உறையாடிவிட்டு போனை வைத்தாள். கிட்டதட்ட மூன்று மணி நேரத்திற்கு மேல் உரையாடி களைத்துவிட்டாள்....
மணியை பார்த்தவள் அது இரண்டென காட்ட அப்போதே பசிப்பதை உணர்ந்தவள்...

நெஞ்சாங்கூட்டில்Where stories live. Discover now