ஹலோ கேர்ல்ஸ்... இப்பவாவது சொல்றிங்களா???
ஏன் இரண்டு பேரும் வீட்டுக்கு தெரியாம பழகுறிங்கனு.... அப்படி என்னதான் சண்ட- ரகு.அது பெரிய கத.. எங்களுக்கு கரக்ட்டா என்ன நடந்ததுன்னு தெரியாது. எல்லாம் நாங்க பிறக்குறதுக்கு முன்ன நடந்தது... பட் தெரிஞ்சளவு சொல்றோம்... - பவி.
அம்மா தாயே அப்போ வழவழனு இழுக்காம சீக்கரம் ஆரபிங்க அப்பதான் வீட்டுக்கு போறதுகுள்ள முடிக்க முடியும்...
என்ற ரகுவை முறைத்துவைத்தாள் பவி..நா சொல்லல நதி நீயே சொல்லு... - பவி.
அது... ராஜமாணிக்கம் எங்க கொல்லுதாத்தா ...
இதை கேட்டவுடன் இவ்வளவுநாள் அமைதியாக இருந்த ( நடித்த) வருண்.. ஹே என்ன உங்க அப்பாவ பொசுக்குனு கொல்லுதாத்தான்ற....
வருண் நா சொல்லவா வேண்டாம... அமைதியா கேட்டா சொல்றேன் என கடுப்பாகினாள் நதியா.
பிரதர்ஸ் கொஞ்சம் அமைதியா இருங்க அவ சொல்லட்டும்- ஸ்ரீ
அது கொல்லுதாத்தா பேரு அததான் எங்க அப்பாக்கு வச்சுருக்காங்க....
அம்புஜம் தான் கொல்லுபாட்டி..இவங்களுக்கு நாராயணன், கந்தன் அப்டினு இரண்டு பசங்க... அப்பறம் மல்லிகானு ஒரு பொன்னு...
நாராயணன் பெரியவரு கந்தன் அவருக்கடுத்து இரண்டு வருசம் கழிச்சு பிறந்த இரண்டாவது பயன் மல்லிகா கடைகுட்டி...
தங்கச்சின்னா அப்படி போட்டி போட்டு பாசம்மா.. இரண்டு அண்ணனுங்களுக்கும்...
இதெல்லாம் நமக்கு தேவயானதா... என வருண், ரகு பார்வை பரிமாற... அதை கண்ட நதியா அவர்கள் எண்ண ஓட்டத்தை புரிந்ததாக... ஹலோ இது நம்ம பேம்லி பத்தினது...ஷோ தெரிஞ்சுக்கிறது அவசியம்....மல்லிகா பாட்டிய பக்கத்து ஊர்ல இருக்கற சுப்பையா, கனகு அவங்க மகன் பழனிசாமிக்கு கல்யாணம் பன்னி கொடுத்துட்டாங்க நம்ம கொல்லு தாத்தா.
பழனிசாமி தாத்தா ஒரே பயன்தான்.நம்ப ராஜமாணிக்கம் தாத்தா, இரண்டு பசங்களுக்கும் வேறவேற வீட்டுலருந்து மருமக எடுத்தா.. எதாவது சங்கடம் வரலானு.. ஒரே வீட்டுலயே மருமக எடுக்கலானு முடிவெடுத்தாரு...
பழனிசாமி தாத்தோவோட சித்தப்பா- வேலாயுதம், சித்தி- சரசு. இந்த தம்மதிக்கு இரண்டு பொன்னுங்க அவங்கதான் சிவகாமி, வள்ளி.
தாத்தா இவங்களயே பேசி முடிச்சு அடுத்த ஒரு ஒரு வருசம் கேப்புல இரண்டு பேருக்கும் கல்யாணம் பன்னிட்டாரு.
நாராயணன்- சிவகாமி,
கந்தன்- வள்ளி.ஏதோ புரிவதாய் இருந்தது ஆடவருக்கு....
இதுல நாராயணன் நம்ம வீட்டுல இருக்க தாத்தா... கந்தன் பவி வீட்டுல இருக்க தாத்தா...
என்னது நாம்மல்லாம் ரிலேட்டிவ்ஸா..... ( கடவுளே பவிய என்னோட சித்திப்பொன்னா ஆக்கிடாதிங்க... அவன் அவன் கவல அவனுக்கு)
ஹிம்....
நாராயணன் தாத்தாக்கு ராஜமாணிக்கம் , சுசிலானு இரண்டு குழந்திங்க..மல்லிகா பாட்டிக்கு கனகவள்ளி, மீனாட்சினு இரண்டு பொன்னுங்க...
கந்தன் தாத்தாவுக்கு கலையரசன்னு ஒரு மகன்தான்.(ஹப்பாடா தப்பிச்சென்டா சாமி...) அப்போ பவியும் மாமா பொன்னுதானா.. - ரகு.)
ஆமா ஆமா... என் சித்தப்பா பொன்னு அன்ட் என் சித்தி பொன்னு....
இதுல என்னம்மா பிரச்சன... அதான் எல்லாம் பர்பக்டா இருக்கே- ஸ்ரீ
இருங்க சொல்றேன்...
அப்பாக்கும் அம்மாக்கும் மேரேஜ் ஆகிடுச்சு...கலையரசன் அப்பாவும் மீனாட்சி அம்மாவும் லவ் பன்னாங்கலாம்...
சின்னவயசுலருந்து...ஓஓஓ... இப்ப புரியுது... என் அம்மாக்கு நடந்ததுதான் நடந்துருக்கும்... இதென்ன... அவங்களா முடிவு பன்னா ஓகே... இதே பசங்க அதே முடிவ சொன்னா... ஏத்துக்கமாட்டாங்களா??? அம்மாகிட்ட பேசாம இருந்ததுல நியாயம் இருக்கு... ஆனா சின்னமாமா சின்ன தாத்தாகிட்ட பேசாம இருக்கறது??! என்ன கொடும சரவணா- ரகு.
ஓவரா பேசாதிங்க... எல்லார்த்துக்கும் காரணம் இருக்கு..- பவி.
என்னம்மா பவி உனக்கு சாதகமாதான பேசுனேன்... - ரகு.
பேசறது பெருசுல்ல என்ன நடந்ததுனு தெரிஞ்சுக்கனும் அதுக்கு முன்னாடி அவங்கள தப்பு சொல்ல கூடாது... - பவி.
நீங்க அக்கா தங்கசிங்க... நடத்துங்க நடத்துங்க... - ரகு.
ஆமா அவங்க லவ்வுக்கு வீட்டுல தடை இல்லதான்.
கந்தன் தாத்தாவும் கனகவள்ளிமாவயும், மீனாட்சிமாவயும் தான் அவரு மருமகனு சொல்லிதான் வளர்தாரு... கலையரசன் அப்பாவும் அப்படிதான் நெனச்சாரு.ஆனா இவங்க எல்லாருமே ஏத்துக்காம இருக்க எந்த காரணமும் இல்ல... ஆனா இதுக்கு மெய்ன் வில்லன் பழனிசாமி தாத்தாவோட தாய்மாமா பேரன் முத்தரசுதான்...
ESTÁS LEYENDO
நெஞ்சாங்கூட்டில்
RomanceHi friends.... இது என்னுடைய இரண்டாம் படைப்பு... என்னுடைய முதல் கதை நினைவெல்லாம்நீயேவிற்கு ஆதரவளித்து எனக்கு எழுத ஊக்கம் தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி... நீங்கள் எனக்களித்த ஆதரவினால்... உங்களின் விருப்பத்திற்கினங்க... இதோ நெஞ்சாங்கூட்டில் உங்...