திருமணத்திற்கு ஒரு மாதமே இருக்க... நிச்சயதார்த்தத்தை திருமணத்திற்கு முந்தய நாள் முடிவு செய்திருந்தனர்.திருமணத்திற்கான துணிமணி, மாங்கல்யம் வாங்குதல் என அனைத்தும் தடபுடலாக நடந்து கொண்டிருந்து.
அங்கு நம் கஜேந்திரனோ மிக முக்கிய புராஜக்ட் விஷயமாக... வேலை பழுவில் தன் திருமண நிகழ்வினை போனில் பார்க்கூட நேரமின்றி உலன்று கொண்டிருந்தான்.சிவாவும் ராமும் சாணக்கிய சோலையில் உள்ள தங்கள் வீட்டினை அடைந்தனர். (ராம் வீடுப்பா).
அவ்வபோது பிறந்தவீட்டுற்கும் புகுந்தவீட்டிற்கும் சென்று தேவையானவற்றை செய்வதே அவள் வேலையானது.
நதியாவிடம் சிவா திருமணம் பற்றி கேட்டால் பவியிடம் கூறியவற்றையே திரும்ப ஒப்பித்து கொண்டிருந்தாள்.
ஒரு பெண்ணின் மனது இன்னொரு பெண்ணிற்கு புரியும் என்பார்கள்... ஆனால் தன் மனதே புரியாமல் இருப்பவள் மனது அனைவருக்கும் ஏன் அவளுக்கும் கேள்விக்குறிதான்.
எதை பற்றியும் சிந்திக்காமல்... நடப்பதை அதன் போக்கில் எடுத்து தன் விதியை ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தாள். மற்ற பெண்கள் திருமணத்திற்கு முன் மணமகனிடம் பேச நினைப்பதுக்கூட இவளுக்கு தோன்றவில்லை.
ஒரு இயந்திரத்தை போல் நடந்தவளுக்கு தன் திருமணத்தில் தான் ஏன் மகிழ்ச்சியின்று இவ்வாறு உலவுகின்றோம் என்றுகூட தெரியவில்லை.
அவளுக்கிருந்த ஒரே நிம்மதி தனது விதி இவ்வாரிருக்க வருணிற்கு தேவையில்லாத ஆசை காட்டவில்லை என்பதுதான்.திருமணத்திற்கு ஒரு வாரம் என்றிருக்க முகூர்த்த கால் நடுதல் மூன்று வீட்டிலும் நடந்தேறியது.
அனைத்திலும் பவி உற்ச்சாகமுடன் கலந்து கொண்டாலும்... நதியின் மனக்கவலை இவளையும் வாட்டிகொண்டுதான் இருந்தது. கஜேந்திரனுக்கு அங்கு வேலை முடியாததால் திருமணத்திற்கு முந்தய நாள் வருவதாக கூறியிருந்தான்.
தன்னவளைக் காண தான் காத்திருந்தாகவேண்டும் என்ற நிபந்தனையில் இருந்தான்.வருணும் லண்டனிலிருந்து வீடு வந்து சேர்ந்தான். தன் சகோதரனின் திருமணத்தில் தள்ளி நிற்க வாய்பில்லை அல்லவா.
என்னதான் அவன் வெளிப்பார்வையில் அனைவர் முன் சிரித்தாலும்... அவன் கண்களில் கவலை ரேகையினை சரியாக கணித்தனர் சிவாவும், ரகுவும்.
YOU ARE READING
நெஞ்சாங்கூட்டில்
RomanceHi friends.... இது என்னுடைய இரண்டாம் படைப்பு... என்னுடைய முதல் கதை நினைவெல்லாம்நீயேவிற்கு ஆதரவளித்து எனக்கு எழுத ஊக்கம் தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி... நீங்கள் எனக்களித்த ஆதரவினால்... உங்களின் விருப்பத்திற்கினங்க... இதோ நெஞ்சாங்கூட்டில் உங்...