அடுத்தநாள் காமாட்சி பாட்டி வர... அவரிடம் நலம் விசாரித்துக்கொண்டிருந்தான் ராம்... அப்போது கீழே வந்த சிவாவின் புறம் அவரது பார்வை திரும்ப.... ஹிம் பாட்டி நா உங்ககிட்ட போன்ல சொன்னனே... என் மாமா பொன்னு... என அவன் கூறியவுடன் என்ன இவன் இப்டி சொல்றான் என நினைத்தவள்... அட என்னப்பா நீ உன் பொண்டாட்டினு சொல்லு என அவளிடம் சென்றவர்.. தங்க செலையாட்டம் இருக்கம்மா... பேரு என்ன ராஜாத்தி என்றவுன் அவளுக்கு அவளது மல்லிகா பாட்டி நினைவு வர... சிவபாரதி பாட்டி என்க... கைகள் சுழற்றி நெட்டி முறித்தார்...
பாட்டி நீங்க காமாட்சி பாட்டிதான... நேத்துதான் உங்கள பத்தி சொன்னாங்க என்றாள்..
ஆமாண்டா ராஜாத்தி...தாத்தாக்கு உடம்பு சரி இல்லாததுனாள கல்யாணத்துக்கு வர முடியலமா என்றார்....
சரி விடுங்க பாட்டி... பரவால தாத்தா எப்டி இருக்காங்க என்றாள்...
ஹிம் நல்லாருக்காரு மா.....ஹிம்கும் என செருமியபடி உங்க பாட்டி பேத்தி புராணம் முடிஞ்சா எங்களயும் கொஞ்சம் பார்கலாமே என ராமும் கார்திக்கும் அங்கு வந்தனர்...
அட வாப்பா கார்தி நல்லாருக்கியாப்பா...
ஹிம் ஆல்வேய்ஸ் பைன் பாட்டி... - கார்திக்.சரி சரி எல்லாம் குளிச்சிட்டு வாங்க... நா சமையல் ரெடிபன்றேன் என்றவர் காபி வைத்து அவர்களுக்கு கொடுத்து அனுப்பிவிட்டு சமைக்க சென்றார்...
சிவா குளித்துவிட்டு சமையல் அறைக்கு சென்றாள்...
பாட்டி செம்ம வாசம் ஊரயே தூக்குது... எனக்கு சொல்லி தரிங்களா சமைக்க என்றாள்....
சரிடா... சொல்லிதந்துட்டா போச்சு... என கூறிகொண்டிருக்கையில் அங்கு வந்த ராம் பாட்டி இவள மட்டும் எந்த வேலையும் செய்ய விட்ராதிங்க.....பாருடா என் பேரனுக்கு எவ்ளோ பாசமுனு... சரிப்பா எஜமான் சொன்னா கேட்க வேண்டியதுதான் என்றார்....
அட நீங்க வேற பாட்டி... இவ உங்க வேலய இரண்டாக்குவா... என் அனுபவத்துல சொல்லுறேன் பார்த்து சூதானமா இருந்துகோங்க அப்பறம் உங்க இஷ்டம்... அப்போது அவனை முறைத்துகொண்டிருந்த சிவாவை பார்த்து நமட்டு சிரிப்பொன்றை உதிர்த்தான்....
ESTÁS LEYENDO
நெஞ்சாங்கூட்டில்
RomanceHi friends.... இது என்னுடைய இரண்டாம் படைப்பு... என்னுடைய முதல் கதை நினைவெல்லாம்நீயேவிற்கு ஆதரவளித்து எனக்கு எழுத ஊக்கம் தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி... நீங்கள் எனக்களித்த ஆதரவினால்... உங்களின் விருப்பத்திற்கினங்க... இதோ நெஞ்சாங்கூட்டில் உங்...