பகுதி-7

4.1K 177 34
                                    

மதிய உணவிற்கு பின் கார்திக்கும் ராமும் ரெஸ்ட் எடுக்க சென்றனர்... மற்றவர்கள் காப்பு கட்டிற்கான தலை இலைகளை எடுத்து வர ராஜமாணிக்கத்துடன் காட்டிற்கு சென்றனர்.
அனைத்தையும் பறித்து வந்து காப்பு கட்டிக்கொண்டிருந்தனர்.
ராஜமாணிக்கம் சுசீலாவுடன் வெளியில் கிழம்பி சென்றார்.
ரகு, வருண், சிவா, நித்யா, நதியா அனைவரும் வீட்டை சுற்றிலும் கதை பேசியவாறு காப்பு கட்டிக்கொண்டிருந்தனர்.
ஆடவன் போன்று ஏணியில் ஏறி வேலைகள் பார்த்துக்கொண்டிருந்தாள் சிவா.
அவள் ஏணியில் ஏறிய சமயம், நதியாவிடம் வருண் காப்பு கட்டுவதற்காக இலையை எடுத்துகொடுக்க சொன்னதும் அங்கு செல்ல ,அச்சமயம்
வெளியில் சத்தம் கேட்டு வந்த ராம் அவனிருந்த அறையின் வாயிலில் நின்ற ஏணியை கவனிக்காமல் நடந்து வர அதை இடித்துவிட்டான். ஏணி இடித்ததில் பேலன்ஸ் தவறி கீழே விழ வந்தவளை பார்த்தவன் உடனே தன் இரு கரங்களால் தாங்கி பிடித்தான்.

பிடித்த மாத்திரத்திலேயே என்ன பன்றிங்க... இறக்கிவிடுங்க என்ன என சிவா சொல்ல... உடனே சுயநினைவிற்கு வந்து கண்களை வேறுபுறம் திருப்பியவன் அங்கு மற்றவர்கள் என்ன என கேட்டுக்கொண்டே வரும் சத்தம் கேட்டு உடனே இறக்கி விட்டான்.

ச்ச அறிவே இல்லயா பார்த்துவரமாட்டிங்க என பதற்றத்தில் அவனை திட்டியவளை
ஹலோ ஒன் மினிட்.. உன்னலாம் கீழ விழ விட்டுருக்கனும் தாங்கி பிடிச்சம் பாரு என்ன சொல்லனும்... அப்பப்பா ஓவர் வெய்ட் டா சாமி... கையே ஒடைஞ்சுடும் போல... என இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டிருக்க இளவர்கள் அனைவரும் அங்கு வந்தனர்.
கார்திக்கும் அங்கு வந்தான்.
பெண்களை கண்டாலே ஆகாது என பெண்களிடம் அதிகம் பேசாத தன் நண்பன் இவளிடம் இவ்வாறு சண்டையிடுவதை கண்டு அவனுக்கு ஆச்சரியமாகதான் இருந்தது.

ஒரு வழியாக அனைத்து இடத்திலும் காப்பு கட்டிவிட்டு இளவர்கள் குளித்து தயாராக சென்றனர்.

அன்னையர் அனைவரும் சேர்ந்து உணவு வகைகளை செவ்வனே செய்து முடிக்க ஆறு மணிக்கு மேல் அவர்கள் வயலில் உள்ள பெருமாளுக்கு பூஜைகள் செய்து விரதமிருந்தவர்கள் அனைவரும் விரதம் முடித்தனர்.

நெஞ்சாங்கூட்டில்Where stories live. Discover now