நின் முகம் கண்டேன்
பொழுது புலரந்தும் புலராத அந்த ரம்மியமான அதிகாலை பொழுதில் சில்லென்ற ஈரக்காற்றுக்கு இதமான தேனீருடன் பால்கனியில் அமர்ந்திருந்தவளின் மனதில் அவளுடைய நாயகனின் நினைவுகள் வலம் வந்த வண்ணம் இருந்தன.
அவற்றையெல்லாம் ஒரே நொடியில் கலைத்தது அவளது 5 வயது மகள் வானதியின் சிணுங்கலான குரல் .
"அம்மா எல்லாம் ரெடியா ? ஏன் மா என்னை சீக்கிரம் எழுப்பல? இன்னைக்கி எனக்கு ஸ்கூல்ல பாட்டு போட்டின்னு சொல்லி இருந்தேன்ல " சொல்லி கண்களை கசக்கிக் கொண்டே வந்தாள். அவளின் குட்டி இளவரசி வானதி.
மகளை கண்டதும் "இதழில் குடிக்கொண்ட சிறு புன்னகையுடன் இல்லடா செல்லம் டைம் அப்படி ஒன்னும் அதிகமா ஆகலை இப்போ கிளம்பினா தான் சரியா இருக்கும்" மகளுக்கு சமாதானம் கூறி காலை உணவினை தயாரிக்க சென்றாள் வைஷ்ணவி.
வானதி வானத்தில் இருந்து இறங்கி வந்த தேவதை, பாலில் ஒரு துளி சந்தனம் விழுந்தது போல் நிறம், கயல் விழிகள் , தோல் வரை புரளும் கூந்தல் அச்சு பிசகு இல்லாமல் பேசும் பொற்சித்திரம். அம்மாவிடம் கிடைத்த கேள்வி ஞானத்தால் இனிமையாக பாடும் வரம் பெற்றவள்.
ஹைதராபாத்தில் புகழ் பெற்ற பள்ளியில் முதலாம் வகுப்பில் பயிலும் மாணவி வானதி. அப்பள்ளியில் நடைபெறும் ஆண்டு விழாவிற்காகத்தான் தயாராகி கொண்டிருந்தாள்.
"வைஷூ..வைஷு... என்னமா செய்ற ? குல்லு ரெடி ஆகிட்டாளா ? நீ ரெடியாமா கிலம்பலாமா ?" மாடி படிகளை விட்டு இறங்கினார் அத்தை ஊஷா.
பொட்டு மட்டும் தான் வைக்கனும் . இதோ வறேன் அத்தைன்னு அறையில் இருந்து குரல் கொடுத்தாள் வைஷு என்கின்ற வைஷ்ணவி. வட்ட முகம், மான் விழிகள் , திருத்திய வில் போன்ற புருவம், கூர் நாசி ,செதுக்கிய ரோஜா இதழ், இடை வரை நீண்ட கூந்தல் அவளுடைய தந்த நிறத்திற்கு அடர் கரும்பச்சை நிறத்தில் நட்சத்திரங்கள் அங்காங்கே தெரித்தார்போல் வெள்ளை முத்துக்கள் பதித்த புடவை மேலும் பாந்தமாக பொருந்தி அழகுக்கு அழகு சேர்த்தது.
YOU ARE READING
நின் முகம் கண்டேன். (Completed)
General Fictionஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....