பகுதி 33
"என்னமோ சொன்னிங்க என் மருமக தங்கம் வைரம்ன்னு பாத்திங்களா!?!... எப்படி எடுத்தறிஞ்சி பேசுறான்னு..... ஏதாவது சமாதனம் சொன்னாளா? பேச்ச பாத்திங்களா!?!.." என்று கணவரிடம் குறை கூற ....
"நீ ஆடுற ஆட்டத்துக்கு என்னடி பண்ணுவாங்க எந்த ஒரு தன்மானம் உள்ள பொண்ணும் அப்படிதான் நடந்துக்குவாங்க" என்று மருமகளுக்கு வக்காளத்து வாங்க கோபத்தின் உச்சிக்கே சென்றார் மாதுரி. வார்த்தைகள் விஷத்தில் தோய்த அம்பாய் வெளி வந்தது.... "வரே வா சபாஷ்!!!!! எல்லாரையும் நல்ல மயக்கி வைச்சிருக்க!!!!..... உன்னை சொன்ன எல்லாரும் துடிக்கிறாங்க!?!?" என்று கூற .....
"அத்த.........." என்று உரக்க கத்தினாள் வைஷ்ணவி
"என்னை வாடி போடின்னு கூட கூப்பிடு.... உன் வாயல என்னை அத்தைன்னு கூப்பிடாதே..... கேக்கவே அசிங்கமா இருக்கு". மாதுரி
"அவர் பேச்சில் எரிமலையை போல் குமுறியவள் வெளியே போங்க..... வெளியே போங்க........ இன்னும் ஏன் இங்கயே நின்னுகிட்டு இருக்கிங்க... அதான் என்னை வேணான்னு சொல்லிட்டிங்கல்ல இன்னும் யார உயிரோட வார்த்தைகளால கொல்ல நின்னுகிட்டு இருக்கிங்க???....." என்று உணர்ச்சிவசம் இழந்நது கத்த
"வைஷ்ணவியின் குமுறளில் பயம் கொண்டவன் "மா வைஷூ இவங்களெல்லாம் ஒரு ஆளு அவங்களுக்காக இவ்வளவு எமோஷன் ஆகுறியேம்மா" என்று தங்கையை சமாதனப்படுத்த
"அண்ணா... அண்ணா..... போக சொல்லு அவங்கள அவங்கள பாத்தாலே எனக்கு தலை வெடிக்குது உடம்பெல்லாம் எரியுது பிளீஸ் போக சொல்லு" என்று அழுதாள்
"என்னம்மா நடிக்கிறா.... " என்று மனதில் நினைத்த மாதுரி கணவரிடம் திரும்பி "என்ன?? அவ திமிருத்தனத்த பாத்திங்களா?!? எப்படி கத்துறா... தப்ப மறைக்க கத்தினா சரியா போச்சா?!?!.. என்று பேசிக்கொண்டே போக
"மாதுரி ...." என்று வார்த்தைகளில் அனைலை காட்டி , "இப்படி சாமி ஆடிகிட்டே தான் இருப்பியா?.... அம்மா... தாயே.... புள்ளை வரவரையும் உன் ஆட்டத்தை கொஞ்சம் நிறுத்தி வை" விஜயபாஸ்கர்.
أنت تقرأ
நின் முகம் கண்டேன். (Completed)
قصص عامةஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....