பகுதி 49
மும்பை
வைஷ்ணவியை அறையில் விட்டுட்டு மகளை அழைத்துக்கொண்டு கீழே செல்லஅப்பா நானும் அம்மாவும் அருணாசல தாத்தா வீட்டுக்கே போறோம் என்று அவனின் அன்பு மகள் கூற
ஒரு நிமிடம் அதிர்வாய் மகளை கண்டான் அழுது வீங்கிய கன்னங்கள் சிவந்திருந்த கண்கள் என்று மகள் இருக்க என்னடா குட்டிபாப்பவுக்கு இன்னும் கை வலிக்குதா டா என்று செல்லம் கொஞ்சி கேட்க
இல்லை என்றே மகள் தலை ஆட்டினாள்
ஓ அம்மாவுக்கு உடம்பு சரியில்லன்னு பயந்துட்டியா டியர் ஒன்னுமில்லடா ஹாஸ்பிட்டல்ல அம்மாக்கு இன்ஜங்ஷன் பண்ணி இருக்காங்கடா அம்மா காலைல எழுந்திடுவாங்க என்று கூறி சமதானம் படுத்தினான்.
அவன் சமாதனத்தில் ம் என்று முனங்கி தலை ஆட்டியவள் நாங்க எப்போ ஊருக்கு போவோம் லலிதா பாட்டிய பாக்கனும் என்று மறுபடியும் கண்கள் குளமாக
ஏன்டா செல்லம்.... ஏன் அழுகுறிங்க.... என்று தூக்கி மடியில் அமர்த்தியவன் முதுகில் தட்டி கொடுக்க... பா நான் தாத்தா வீட்டுக்கு போறேன். என்றாள்.
ஏன் டா?? உனக்கு.என்ன ஆனது டா?? ஏன் தாத்தா வீட்டுக்கு போகனும்னு அடம்பிடிக்கிற??? என்று கேட்கவும். நேகா அடித்ததும் தன்னையும் தாயையும் திட்டியதும் நினைவு வர அனைத்தையும் அழுகையுடனே கூறியவள் நான் இங்க இருக்க மாட்டேன். நாங்க தாத்தா வீட்டுக்கே போறோம். என்று வானதி அழ தொடங்கினாள்.
அவள் கூறியதும் மகளை தூக்கி கொண்டு ஆவேசமாய் படி இறங்கியவன் நேகா என்று வீடே அதிரும்படி கத்தினான்.
அனைவரும் நடுகூடத்திற்க்கு வந்திருந்தனர்.
அவனது ஆவேசத்தை பார்த்த விஜயபாஸ்கர் என்ன கௌஷிக் என்ன என்று பதறி முன்னால் வந்தார்.
கொஞ்ச இருங்கபா என்றவன் அவரிடம் எதுவும் கூறாமல் நேகா நேகா என்று மறுபடி அழைக்க அறையில் இருந்து நேகாவும் வந்தாள்.
ருத்திரமாய் கண்கள் சிவக்க நின்றிருந்த கௌஷிக்கிடம் என்ன கௌஷிக் ஏன் ஒரு மாதிரி இருக்கிங்க என்று சாதரணமாக கேட்டபடி நேகா பக்கத்தில் வர ஐந்து விரலும் பதியும் அளவிற்க்கு கன்னத்தில் ஓங்கி ஓரு அறை விட்டான்.
![](https://img.wattpad.com/cover/138397311-288-k278508.jpg)
KAMU SEDANG MEMBACA
நின் முகம் கண்டேன். (Completed)
Fiksi Umumஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....