பகுதி 36
குளியலறைக்குள் சென்றவள் ஷவரை திறந்துவிட்டு யோசனையில் முழ்கினாள். "இன்னைக்கு நடந்தது நிஜமா கற்பனையா!?!!... அவர்... அவர் என்கிட்ட பேசினாரே!!! எப்படி??.. ரொம்ப கேஷ்வலா டிரஸ் பண்ணி இருந்தாரே!! எப்படி?? நான் ஒருவேளை அவரை பத்தியே யோசிக்கிறேனோ!!?!... ஏன் இப்படியெல்லாம் நடக்குது???... " என்றவள் கௌஷிக் பற்றிய சிந்தனையில் அரைமணி நேரமாய் ஷவரிலேயே நின்றிருக்க இன்னும் கதவை திறந்து வைஷ்ணவி வெளியே வராத காரணத்தால் வந்த நீலா கதவை தட்டி "வைஷூ என்ன தூங்கிட்டியா?? இல்ல கனவு காணுறியா?? இன்னைக்கு ரொம்ப அர்ஜன்ட் வொர்க் இருக்குன்னு உள்ள புகுந்துகிட்டவ இப்போ வெளியவராம உள்ளயே இருக்க !??!." என்று கேட்க
தன்தலையில் தட்டிக்கொண்ட வைஷ்ணவி "இதோ வரேன் அண்ணி நீங்க போங்க" என்று குளியலை முடித்து வெளியே வந்தாள்.
வந்தவளை எல்லோரும் வியப்பாய் பார்க்க "ஹி ஹி "என்று அனைவரின் பார்வைக்கும் பதிலாய் வழிந்தபடி அலுவலகம் செல்ல தயாரானாள்....
மதிய உணவிற்காக அத்தை செய்து கொடுத்த உணவினைக்கூட மறந்தவள் காலை குளியலை முடித்து அழகாய் தயராய் வந்த வானதியை பார்த்ததும் அவள் உயரத்திற்க்கு அமர்ந்து "மாமகூடவும் அத்தைகூடவும் சமத்தா இருப்பையாம் அம்மா வரும்போது உனக்கும் தம்பிக்கும் சர்பிரைஸ் வங்கிட்டு வருவேனாம்" என்றாள் வைஷூ.
"சரிமா நான் சமத்தா குட் கேர்ள்ளா இருக்கேன் மா அந்த சர்பிரைஸ் எனக்கு மட்டும் என்னன்னு சொல்லுங்க மா" என்று செல்லங்கொஞ்ச
"ம்கூம்... இப்போ சொல்ல மாட்டேனே இவினிங் தான் தருவேன் சோ இப்ப என்ன செய்யனும் சொல்லுங்க" .வைஷூ
"கலரிங்தானே...... ஓகே செய்றேன் .. ஆனா சர்பிரைஸ் மறக்காம வந்திடனும் டீலா" வானதி
சற்று யோசிப்பது போல் பாவனை செய்தவள் "ஓகே டீல்"என்று கூறி தாயும் மகளும் தம்சப் காட்டிக்கொண்டனர்.
வைஷூவை அனைத்து" ஐ லவ் யூ மா" என்று வானதி கூற "லவ் யூடா செல்லக்குட்டி" என்று முத்தம் வைத்து எழுந்தவள் தூங்கிக்கொண்டிருந்த சத்தியனுக்கும் முத்தம் வைத்து சென்றாள்.
![](https://img.wattpad.com/cover/138397311-288-k278508.jpg)
YOU ARE READING
நின் முகம் கண்டேன். (Completed)
General Fictionஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....