வைஷூ வந்து அமர்ந்ததை பார்த்ததும். தான் வேலை செய்து கொண்டிருந்த லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு மனைவியின் பக்கம் வந்து அமர்ந்தவன் "அத்தைகிட்ட பேசினியா". என்றான்.
"ம்... பேசினேங்க அவங்க ஏதோ டிஸ்டர்பா இருக்காங்க...
ஏங்க நாம இங்க வந்து ரொம்ப நாள் ஆகுது நாம அம்மாவ போய் பாத்துட்டு வரலாமா? அவங்களுக்கும் என்னை பாக்கனும் போல இருக்கும்ல?". என்றாள் மென்மையான குரலில்.அவளின் கைவிரல்களை பிடித்தபடி "ஆமா டாலி உன்னை விட்டு யாரலதான் பிரிஞ்சி இருக்கமுடியும்... அதுவும் என்னால முடியவே... முடியாது.." என்றான்.
"இப்போ ஐயா எதுக்கு இந்த பிட்ட போடுரிங்க?". என்றாள் அவள் கைகளை விடுவித்தபடி.
"கள்ளி சரியா கண்டுபிடிச்சிடடி..."என்றான். அவளுடைய தாடையை பிடித்து ஆட்டி.
"கைய எடுங்க... விஷயத்தை சொல்லுங்க...".
"அது... அது... இந்த வீக் போக முடியாது பாரின் பார்ட்டிஸ்லாம் வராங்க... டேடியால தனியா மேனேஜ் பண்ணமுடியாது சோ...." என்று இழுக்க.
ஓரக்கண்ணால் அவனை பார்த்தவள் சட்டென எழுந்துகொள்ள அவளின் கரம் பிடித்து. "சரி சரி என் டாலி பேஸ் சேடா இருந்த இந்த மாம்ஸ் மனசு தாங்குமா என்று கூறி இந்த மாமா மனசே இல்லாம உன்னை விட்டுட்டு வரேன்". என்றான்.அவளின் கூந்தலை வருடிகொடுத்து
'இந்த ஒன் டைம் பிளீஸ்ங்க... அம்மாவ பாக்கனும் போல இருக்கு. அங்க போனாலும் எனக்கு உங்க நியாபகம்தான் இருக்கும். அதனால சீக்கிரமே என்னை பார்க்க வரனும் சரியா" என்றாள் கணவனின் மார்பில் சாய்ந்தபடி.
"செல்லகுட்டி இப்படி காலைலயே வந்து மாமனுக்கு மூட் ஏத்துனா கன்ட்ரோல் மிஸ் ஆகுதுல்ல" என்றான் அவளை அணைத்தபடி.
அவனின் அணைப்பில் இருந்தபடியே "என்னங்க எனக்கு ஒரு டவுட் எனக்கு தெரிஞ்சி நீங்க சென்னைல படிக்கல,பட் அங்க பேசறமாரியே எப்படிங்க திக்காம ,தினராம பேசுரிங்க அத்தைக்கு கூட தமிழ் சரியா வரல?" என்றாள்.
![](https://img.wattpad.com/cover/138397311-288-k278508.jpg)
STAI LEGGENDO
நின் முகம் கண்டேன். (Completed)
Narrativa generaleஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....