பகுதி 3

10.4K 238 52
                                    

Part 3

ஶ்ரீ யின் பிரகாசமான முகத்தை கண்டு கௌஷிக்கும் சௌந்தரும் என்னவென்று யூகித்துவாறு  ஒருவருக்கு ஒருவர் நமட்டு சிரிப்புடன்.

"நாளைக்கு காலைல 6 மணிக்கெல்லாம் மண்டபத்துல இருக்கனும் டா.....ஆமா உன் போன் எங்க ? ஒன் ஹவரா டிரை பண்றேன் என்கேஜிடுன்னு வருது" என்று சௌந்தர் ஒற்றை புருவம் உயர்த்தினான்  கண்களில் குறும்புடன்.

   ஓ மை காட் இவனுங்க கிட்ட என்ன  சொல்றது ? .  ஏதாவது  யோசியேன்டா ஶ்ரீ...  ஐடியா !!! "அது...அது   ஆபிஸ் மேனேஜர் தான்டா பேசினார் ஒரு இம்பார்டன்ட்   ஃபைல் பற்றி சொல்லிட்டு இருந்தேன் " என்று கூறி மனதினில்  இவனுங்க நம்பினாங்களா ,நம்பலையா... கேட்டா அடிச்சி விடுவோம்   என்று  நினைத்திருந்தான் .
ஶ்ரீ யின் மனதில் இருப்பதை படித்தவர்கள் போல் சௌந்தரும் ,கௌஷிக்கும் கோரசாக "நம்பிட்டோம், நம்பிட்டோம் " என்று சிரித்தனர்.

    இவற்றை எல்லாம் கவனித்துக் கொண்டு இருந்த ஶ்ரீயின் தாய் போதும்... போதும்... புள்ளைய விடுங்கப்பா அவனும் எவ்வளவு நேரம் தான் பொய்  சொல்லி சமாளிப்பான்" என்று சிவகாமி தன் பங்குக்கு ஶ்ரீயை வாரினார்.
ஶ்ரீ  தலைக்கு மேல் இரு கைகளையும் கூப்பி "அம்மா ...நீயுமா ? .. போதும் முடியல...என்று கும்பிட்டான்.

    ஹாலில் உறவினர்களுடன் பேசிக்கொண்டு இருந்த  ராஜசேகருக்கு இவர்களின் சம்பாஷனை காதில் விழுந்தது. மனைவி மகன்களின் கவனத்தை களைக்கும் பொருட்டு " ஹிக்கும் "என்று தொண்டையை செறுமினார்.

இதனை கவனித்த சிவகாமி 
" ம்...ஶ்ரீ  , பேசினது போதும் சும்மா  நின்னுகிட்டு இருக்காம ரெண்டுபேரும் போய் நலங்குக்கு ரெடியாகி வாங்க  உறவுக்காரங்க எல்லாம் வந்துட்டாங்க". என்று பரப்பரப்புடன் மகன்களை அங்கிருந்து அனுப்பினார்.

    என்னதான் ராஜசேகர் ஶ்ரீயின்  திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து இருந்தாலும் முழு மனதுடன் இதை ஏற்கவில்லை என்று அறிந்திருந்தார் சிவகாமி.

மகன்கள் இருவரும் நலங்கிற்கு தயாராகி மனையில் அமர்ந்தனர் அத்தை உறவுமுறையில் இருப்பவர்களும் பெரியவர்களும் நலங்கு வைத்து ஆசி வழங்கினர்

நின் முகம் கண்டேன். (Completed)Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin