Is
"கௌஷிக் டாக்டர் என்ன சொன்னாங்க?... ஏன் இடிஞ்சி போய் இருக்கிங்க?... வைஷூக்கு என்ன ஆச்சு?.."என்று சிவா அவனை போட்டு உலுக்க
டாக்டர் கூறிய செய்தியின் வீரியத்திலிருந்து மீண்டவனின் மனம் தன் மனைவியினை காண ஏங்கியது. அவளின் சிரித்தமுகத்தை பார்க்க தவித்தது, ஆசையாய் பேசிய வார்த்தைகளை கேட்க ஆவள் கொண்டது. "சிவா... நான் அவளை பார்க்கனும்" என்றான். சிறுபிள்ளையாய் அவனின் கைபிடித்து, அவனின் செய்கையில் இதயம் வலிக்க "கௌஷிக் நீ போய் பாரு ....டாக்டர் கிட்ட நான் பேசறேன்" என்று தோள்களில் சிறு அழுத்தம் கொடுத்து அனுப்பினான் சிவா.
"உள்ளே சென்றவன் வைஷூ படுத்திருந்த நிலையை காண நடை தளர்ந்தான். அவளின் பெட்டுக்கு பக்கத்தில் இருந்த நாற்காலியில் மனைவியை பார்த்தபடி அமர்ந்தவன் சலைன் ஏறிக்கொண்டிருந்த அவளின் கைகளில் மேல் அவனின் கைகளில் தடவியபடி எதுக்கு மா அங்க போன.... ?என்றவனின் கண்களின் ஈரம் அவள் கைகளில் விழ அதை துடைத்தபடி இப்போ என்ன நடந்துடுச்சி பார்த்தியா? என்று ஆவேசமாக பேச கண்ணை திறந்து பாருமா ....... கௌஷி வந்துருக்கேன் மா,உன் கௌஷி வந்துருக்கேன்...... என்றவனது தொண்டையில் குரல் அடைத்தது. குலாபி ஒரே வாட்டிடி ..... பிளீஸ் டா என்னை பாருடி ...... என்ன ஆச்சி டி உனக்கு..... நீ இப்படி படுத்து என்னை உயிரோட கொல்றியேடி.....என்று கோபமாய் கத்தி உன் கூட ரொம்ப வருஷம் வாழனுமுன்னு ஆசைபடுறேன் டா ..... இப்படி பேச்சி மூச்சி இல்லாம கண்மூடி படுத்து என்னை தவிக்க விடுறியே டா......என்றான் அன்பாய் அவனின் உணர்வுகளை கட்டுபடுத்த முடியாமல் கோபம் அன்பு ஆவேசம் என்று அனைத்தையும் கலந்து கொட்டியவனின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வந்துகொண்டிருந்தது.
அவள் கண் மூடி மயங்கிய நிலையில் இருந்தாலும் கணவனின் வார்த்தைகள் செவிகளை தீண்டிதில் அவள் விழிகளில் இருந்து நீர் அருவியாய் இறங்கியது. அதை விரல் கொண்டே துடைத்தவன் எங்க யாருக்கும் எதுவும் சொல்லாம நீயா எடுத்த முடிவு நம்ம லைப்ல இவ்வளவு பெரிய கஷ்டத்தை கொடுத்து இருக்கு பார்த்தியா??... இதை எப்படி சரி செய்றது!!??... என்று எழுந்து வந்து அவளது பாதங்களை பற்றி பேசியபடி குனிய , இரு விழி நீரும் அவள் பாதங்களை வருடியது. கௌஷி என்ற முனங்கல் சத்தம் கேட்டு அவளை பார்த்தவன் கண்கள் திறக்க முடியாமல் இருந்தபோதிலும் தன் மனதில் பதிந்த தன்னவன் பெயரை உச்சரித்தபடி இருந்தாள். அவளின் அருகில் வந்தவன் அவளின் தலையை கரங்களால் வருடினான். அவன் வருடலில் முனங்கள் அடங்கி அமைதியாகினாள்.

YOU ARE READING
நின் முகம் கண்டேன். (Completed)
General Fictionஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....