பகுதி 39
அறைக்குள் நுழைந்த வைஷாலி தோழியிடம் எதையும் கூறாமல் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். தண்ணிர் குழாயை திறந்துவிட்டு அழுது கொண்டே "அம்மா எனக்கு என்னையே புடிக்கலம்மா ஏன்மா நா இன்னும் உயிரோட இருக்கேன். இன்னைக்கு வைபவ் சொன்ன விஷயம் எனக்கு அதிர்ச்சியா இருந்தாலும் அவர பிடிச்சுது அவரோட நட்பு , அவரோட குணம்,அவரோட குடும்பம் எல்லாம் பிடிச்சிருந்ததும் ஒரு பெண்ணா என்னால சந்தோஷம் கூட பட முடியல நீ போனபோதே என்னையும் உன்கூடவே கூடிட்டு போயிருக்கலாமே... நான் வளந்து என்னத்த சாதிச்சேன்.... அந்த கேடுகேட்டவனால அசிங்கதானே பட்டேன்... அப்பாவும் என்னாலதானே இறந்துபோனார்.. இல்லை, இல்லை நானே அவர கொண்ணுட்டேன்.... என்னையும் நீங்க போன இடத்துக்கே கூட்டிட்டு போய்டுங்கமா பீளிஸ், பீளிஸ் என்னால இருக்கவே முடியலமா" என்று கதறினாள்.
"வைஷாலி வைஷாலி கதவ திறடி என்னடி சத்தம் கதவ திற வைஷாலி" என்று தோழி கதவை தட்டினாள். கதவை திறக்காமல் மீண்டும் அழுதபடியே இருக்க "ஏய் வைஷாலி எனக்கு பயமா இருக்குடி கதவ திறடி" என்று தோழியின் கத்தலில் அமைதியானவள் முகத்தில் தண்ணீரை அடித்து பின் சாதாரணமாக வெளியே வந்தாள்.
"ஏய் என்னடி ஆச்சு ஏதோ போல இருக்க என்னடி நடந்தது வைபவ பாத்துட்டு வறேன்னு போனவ இப்படி பேயறைஞ்சா போல வந்து நிக்கிற சொல்லு டி என்ன நடந்தது... ஏதாவது அதிர்ச்சியான விஷயமா இல்ல ஆக்ஸிடன்டா என்னடி சொல்லுடி சொல்லு" என்று உலுக்க
மறுபடியும் அழ ஆரம்பிக்க அவளை அமைதி படுத்திய தோழி "இங்க வா வைஷாலி வா இப்படி உட்காரு இந்தா தண்ணீ குடி அழாத சொன்னா கேளு அழாத" என்று தேற்ற சற்று அமைதியானாள் வைஷாலி
"வைபவ் என்ன சொன்னார் கல்யாணம் பத்தி பேசபோறதா சொன்னியே என்னாச்சி அவர் என்ன சொன்னார் நீ ஏன் இப்படி இருக்க என்று கேட்க" அவளை சிறிதுநேர மௌனத்திற்க்கு பின் "அவரு அவரு என்னை என்னை" என்று இழுக்க "என்னடி உன்னை" என்று தோழி கேள்வி எழுப்பினாள்
![](https://img.wattpad.com/cover/138397311-288-k278508.jpg)
YOU ARE READING
நின் முகம் கண்டேன். (Completed)
General Fictionஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....