பகுதி 40
தாராவின் பக்கத்தில் அமர்ந்திருந்த வைஷாலி" அம்மா அம்மா" என்று அனற்றிக் கொண்டே வர அவளின் தலையை வருடிகொடுத்து கொண்டே வந்தவர் காரை மருத்துவமனை முன் நிறுத்தினார்.
கைதாங்கலாக அழைத்துக்கொண்டு மருத்துவமனை உள்ளே சென்று நர்சிடம் மருத்துவரை பார்க்க அனுமதி வாங்கியபின் கமலா என்ற பெயர் பலகையை தாங்கிய அறைக்குள் நுழைந்தார் தாரா.
"ஹாய் தாரா " என்ற கமலா அருகில் இருந்த வைஷாலியை பார்த்து "என்ன ஆச்சு தாரா" என்றார்.
"கமலா இவளுக்கு நைட்ல இருந்து ஃபீவர். டேப்லேட் போட்டும் இன்னும் குறையல அனத்திகிட்டே இருக்கா கொஞ்சம் என்னன்னு பாரு" தாரா.
"சரி ,சரி டோண்ட் வொரி இப்படி உட்காரு. இங்க பாருமா" என்று அவளை பரிசோதித்தவர் தாராவிடம் திரும்பி "ஃபீவர் அதிகமாதான் இருக்கு. நைட் டேபிளேட் போட்டிருந்தா இந்நேரத்திற்க்கு ,ஃபீவர் குறைஞ்சி இருக்கனும் . இவங்க ரொம்ப வீக்கா வேற இருக்காங்க இரண்டு செலைன் போட்டு அப்புறம் இன்ஜக்ஷன் பண்றேன்" என்றவர் நர்சை அழைத்து செலைனை ஏற்றச் சொன்னார்.
நர்ஸ் வைஷாலியை அழைத்துக்கொண்டு சென்றதும் "எப்படி இருக்க தாரா பார்க்கவே முடியல"
"சுகர் இல்லை, பிபி இல்லை இப்பவரைக்கும் கொலஸ்ட்ரால் இல்லை நல்லா இருக்கேன்... "என்று சிரித்தவர் " நீ எப்படி இருக்க கமலா...., நம்ம கல்யாணியோட பொண்ணு கல்யாணத்துக்கு கூட வரல போல"
"ம்...என்ன ஒரு டிஸ்கிரிப்ஷன் ப்பபபபபபா நீ மாறவே இல்லை .... நான் வாய கொடுத்து மாட்டிக்கிட்டேன் நான் நல்ல இருக்கேன்..... ஆமா தாரா.. கல்யாணத்துக்கு நான் வரலை அன்னைக்குன்னு பார்த்து ஒரு ஆப்ரேஷன்ல மாட்டிக்கிட்டேன்.... என் ஹஸ்பண்டும் பொண்ணும் வந்திருந்தாங்க நீ பாக்கலையா??".
"அப்படியா ....!!!?? நான் பாக்கலையே... பார்த்திருந்தா பேசியிருப்பேனே ...சரி உன் ஹஸ்பண்டும் பொண்ணும் எப்படி இருக்காங்க??".
"நல்லா இருக்காங்க தாரா .... நானே உன்னை பார்க்கனுமுன்னு நினைச்சிருந்தேன்"
BẠN ĐANG ĐỌC
நின் முகம் கண்டேன். (Completed)
Tiểu Thuyết Chungஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....