Part 6
தோழிகள் இருவரும் பிரபல ஷாப்பிங் மாலிற்க்கு சென்றனர். தங்களுக்கு தேவையான உடைகள் மற்றும் அதற்கு தோதான மேட்ச்சிங் நகை வகைகளை வாங்கியவர்கள் தங்களை தொடர்ந்து வரும் விமலை கவனிக்கவில்லை . அது அவனுக்கு சாதகமாக மாறி நல்லவனாக சித்தரித்தது விதியின் விளையாட்டா அல்லது தோழிகள் இருவரது எதிர்கால
வாழ்க்கையில் சந்திக்கவிருக்கும் சோதனையின் துவக்கமா என்பதனை யார் அறிவர்."வைஷூ பில் கவுண்டர் ரஷ்ஷா இருக்குடி... நீ போய் பக்கத்துல ஆர்டர் பண்ண ஜிவல்ஸ் வாங்கிட்டு பார்க்கிங்ல இருக்க ஸ்கூட்டிய எடுத்துட்டு வாடி அப்புறம்... வந்து இதுக்கும் பயமா இருக்குன்னு சொல்லிடாத ... பிளிஸ் டி " என்றாள் வைஷூ.
"ஏய் என்னடி தனியா அனுப்புற கூட்டமா இருந்தா கூட பரவாயில்ல டி நாம ரெண்டுபேரும் சேர்ந்தே போய்டலாம்" வைஷாலி.
"சென்னைல தனியா வந்து படிக்கிற பொண்ணு இப்படி பயப்படுறியே ! இது உனக்கே நியாயமா? " .என்று அவள் தோழியின் பயத்தை கண்டு தலையில் அடித்துக்கொண்டாள் வைஷ்ணவி .
"சரிசரி ரொம்ப அலுத்தூக்காதடி... இங்க நான் பில் பே பண்றேன் நீ போய் இது எல்லாம் செஞ்சிட்டு வா "என்று சலித்து கொண்டாள் வைஷாலி.
"வைஷூன்னு என் பேர்ல இருக்க பாதிய வெச்சிக்கிட்டு இப்படி பயப்புடுரியே என்னடி என் பெயருக்கு வந்த சோதனை
என்று தோழியை கேளி செய்து ஸ்கூட்டி சாவியை விரலில் மாட்டியவள் "சரி நீ பே பண்ணு நான் போய்ட்டு கால் பண்றேன் வெளியே வா என்று கூறி மால் ஐ விட்டு வெளியே சென்றாள் வைஷ்ணவி.கியூவில் இருந்தவளுக்கு பின் நின்ற இரு ஆண்கள் அவளையே பார்த்திருந்தனர் . எதேச்சையாக பின்னால் திரும்பியவளுக்கு பின் நின்றவர்களின் ஆரஞ்சு பிங்க் கலர்களில் ஸ்பைக் , தலையில் காதின் ஓரத்தில் போட்ட நான்கு கோடு, புருவத்தின் மத்தியில் போட்டிருந்த வளையம் , காதில் தொங்கிய கம்மல், கழுத்திலும் கைகளிலும் போட்டிருந்த நகைகள் இது போன்ற ஒரு தோற்றத்தை பார்த்து பயம் ஏற்படாமல் இருந்தால் அவள் வைஷாலி இல்லையே .
YOU ARE READING
நின் முகம் கண்டேன். (Completed)
General Fictionஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....