Part 4
வார முதல் நாள் காலை நேர பரப்பரப்புடன் அலுவலகத்துக்கு தயாராகி கொண்டிருந்தாள் வைஷூ
" வைஷூ லஞ்ச்சுக்கு வத்த குழம்பும் கோஸ் கூட்டும் வச்சி இருக்கேன்".உஷா
" சரிங்க அத்த குல்லு தூங்கறா இன்னும் எழுந்துக்கல அவ எழுந்ததும் ஏதாவது சேட்ட பண்ணா டேபிள் மேல டிராயிங் புக் கிரயான்ஸ் வெச்சி இருக்கேன் சும்மா வம்பு வலத்தினா அம்மா வரைய சொன்னான்னு சொல்லுங்க கொஞ்சம் அடங்குவா."
வானதிக்கு ஆண்டு விடுமுறை என்பதால் அவளை சமாளிக்கும் வழிமுறைகளை தன் அத்தைக்கு கூறி கொண்டிருந்தாள்.
"பிறந்தது முதல் கூடவே இருக்கும் எனக்கு தெரியாதா? உன் பொண்ணுக்கு டிராயிங்னா பிடிக்காதுன்னு நீ பார்த்து போய்ட்டு வா என்றார் இதழில் நகையுடன் .
" ஒகே அத்த பை "என்று முகம் மலர்ந்தாள் .
கருப்பு நிற ஜீன்ஸ் பேன்ட் இளமஞ்சள் நிறத்தில் காலர் வைத்த டாப் அணிந்து தலைவாரி உச்சியில் சிறு கிளிப் இட்டு முடியை முதுகில் படர விட்டிருந்தாள் . நெற்றியில் சிறிய பொட்டு வைத்து அலுவலகத்திற்கு செல்ல தனது ஸ்கூட்டியில் அமர்ந்து நேரம் பார்த்தவள் "சுதா இன்னும் என்னடி பண்ற?என்று வாய் விட்டு புலம்பினாள்சிறிது சிறிதாக பொறுமையை இழந்து கொண்டிருந்த வைஷூவின் பொறுமையை முழுமையாக சோதித்து சுதா இறுதியில் பார்கிங் வந்து சேர்ந்தாள் .
" வாம்மா வா ரொம்ப சீக்கிரமே கீழ இறங்கி வந்துட்ட என்று கோபம் கலந்த எரிச்சலுடன் கை கடிகரத்தை பார்த்துக்கொண்டு கூறினாள் வைஷூ . தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டே
"அட போம்மா நீ வேற இந்த ஞாயிற்றுக்கிழமை ஹாயா இருந்துட்டு மண்டே ஆபீஸ் போகனுமுன்னாலே எரிச்சல் வருது இதுல ஸ்கூல் கூட லீவு விட்டுடாங்க தான்யாவ பாத்துக்க அம்மாவ வர சொல்லி இருக்கேன் " என்று வாகனத்தை உயிர்பித்து அலுவலத்திற்கு புறப்பட்டு சென்றனர் .M M TOWERS என்ற பெயர் பொறித்த ஏழு மாடி கட்டிடத்தின் முன் நின்றது அவர்கள் வாகனம் . செக்கியூரிட்டி கேட்டை திறந்து விட இருவரும் பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தி விட்டு அவசர அவசரமாக தங்களது அலுவகத்திற்கு செல்ல லிப்டினுள் நுழைந்தனர் .
KAMU SEDANG MEMBACA
நின் முகம் கண்டேன். (Completed)
Fiksi Umumஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....