பகுதி 38
மாலை அலுவலகம் முடிந்து வந்த வைஷ்ணவி ரெஃப்ரஷ் செய்து கொண்டு ஹாலில் வந்து அமர்ந்தாள்.
"காபி எடுத்துக்க வைஷூ..." நீலா
"எதுக்கு அண்ணி நீங்க செய்றிங்க ? இங்க வந்து இருக்கிங்க கொஞ்சமாச்சும் ரெஸ்ட் எடுக்கலாம்ல" வைஷூ
"அப்படியா மா ... இதுவும் என் வீடுதான்... நீ என் நாத்தனார்தான்.... உனக்கு காபி கொடுக்கரதுல நான் குறைஞ்சிட மாட்டேன்" நீலா
"அம்மா தாய்குலமே போதும் ஆரம்பிக்காத உன் உரிமை பிரச்சனைய.... நீ எதுவேனா செய். நான் எதுவும் கேட்க மாட்டேன். காலையிலேயே மூட் ஆப் ஆகிடுச்சி இப்போ என்னால ஆர்கியூ பண்ணமுடியாது. முதல்ல காபிய கொடு தலைவலி போகுதான்னு பாக்கலாம். வைஷூ
"என்னடா தலைவலியா.... ரொம்ப வலிக்குதா.... வா எழுந்துரு... ஆஸ்பிடல் போலாம்... எழுந்துரு டா" என்று பதறிய சிவா வைஷூவின் கைபிடித்து அழைத்தான்.
"அண்ணா.... ஏன் இப்படி நர்வஸ் ஆகுர !??... எனக்கு ஒன்னும் இல்ல சும்மா லைட்டா தலைவலிதான்.. அதுவும் காபி குடிச்சா சரியா போய்டும்." என்றாள் வைஷ்ணவி
"இந்த தலைவலி எப்போல இருந்து வருது??.. ஏன் எங்ககிட்ட சொல்லல?? லைட்டா இருந்தாலும் வா உடனே டாக்டர போய் பாக்கலாம்". சிவா
"ஐய்யோ அண்ணா.... பிளீஸ் எனக்கு ஒன்னும் இல்லை தோ பாரு அண்ணி கொடுத்த காபிலயால எல்லாம் பறந்து போயிடுச்சி Thanks for coffee அண்ணி". என்று நீலாவை பின்னிருந்து கழுத்து வலைவில் கைபோட்டு முகம்பதித்து செல்லம் கொஞ்சினாள் வைஷூ.
"போதும் ,போதும் கொஞ்சினது வா கிளம்பு" என்று எழுந்து வர "நோ நோ எனக்கு ஒன்னுமில்ல" என்று சோபாவில் அமர்ந்தாள். "அம்மா..அத்த...." என்ற கத்தியபடி குழந்தைகள் இருவரும் உஷாவின் அறையிலிருந்து ஓடி வந்தனர்.
"அத்த...... என்று கொஞ்சிய சத்தியனை தூக்கி மடியில் அமர்த்திகொண்டு "என் குட்டி செல்லம்"என்று முத்தம் வைத்து பக்கத்தில் அமர்த்திக்கொண்டாள். "இது பெரியசெல்லம்" என்று வானதிக்கு முத்தம் வைத்து மறுபக்கத்தில் அமர்த்திக் கொண்டாள்.
YOU ARE READING
நின் முகம் கண்டேன். (Completed)
General Fictionஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....