முன்னுரை

793 34 26
                                    

   ஊருக்கு ஒதுக்குபுறமா ஒரு பங்களா அதுல தேவை இருக்கோ இல்லையோ நாலு பேரு போவாங்க அவங்களை அந்த பங்களாவுல இருக்க பேய் வாட்டி வதைக்கும் பின்ன அந்த பேய் தன்னோட பிளஷ்பேக் சொல்லி அதுக்கு காரணமானவங்களை இந்த நாலு பேரை வைச்சுகிட்டு பழிவாங்கும்.......
          இந்த மாதிரி வழக்கமான பேய் கதை டெம்ப்ளேட் இல்லாமா முழுக்க முழுக்க வித்தியசமான பேய் கதை தன்
                          
                           "நான் வருவேன்"

படிக்க படிக்க உங்களுக்கே புரியும்...,

பேய் கதை சினிமாவுல பார்க்கறதுக்கும்,கதையா படிக்கறதுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கு சினிமாவுல எப்படியாச்சும் கலர் யூஸ் பண்ணி பேக்ரவுண்டு மியூசிக் போட்டு பயம் உண்டு பண்ணிடலாம் ஆனால் கதையா எழுதும் போது அந்த எழுத்துலையே பயம் கொண்டு வரணும் இல்லையினா சிரிச்சுட்டு போயிடுவாங்க...,அப்படி நான் படித்து பயந்த கதை தான் என் எழுத்தின் குருநாதர் "சுஜதா" எழுதிய "கொலையுதிர் காலம்" அதை எங்கு எத்தனை காலம் கழித்து படித்தாலும் பயம் தொற்றிகொள்ளும் அந்த வகையில் அதை எழுத்து திறமையால் கையாண்டு இருப்பார்.

        அதுமாதரி ஒரு பேய் கதை எழுதவேண்டும் என்ற எண்ணமே இந்த கதை எழுத காரணம் இந்தகதை எனது அன்பு குருநாதர் "சுஜதா"விற்கு சமர்பணம்
 
                              நன்றியுடன்
                              🙏பாலா🙏
----------------------------------------------------------------------------






நான் வருவேன்...!!!!Where stories live. Discover now