இதுவரை:
ஆனந்த் தன்னை கட்டுபடுத்தி கொள்ள முயல அவன் கைகள் கத்தியை நோக்கி சென்றுகொண்டு இருந்தது.........
இனி:
கைகள் கத்தியை நோக்கி செல்ல.......,
பேபபபபபபபப.....................காதருகே அலறல்
ஹஹஹஹஹஹ......என்று கைகளை உதறி தூள்ளிவிழுந்தால் "மீரா" முச்சைபிடித்துகொண்டு அவள் நார்மல் ஆக முன்று விநாடிக்கு மேல் பிடித்தது......கண்ணிமார நூலகத்திற்கும் தான்
மீரா:
பெயர் போன்ற மென்மை அதில் சுற்றிதிரியும் பெண்மை மீன்தொட்டி பிடிக்கமால் வந்து இவளிடம் நிரந்தரமாய் தங்கிவிட்ட கண்கள்.அதை பத்திரமாக பார்த்துகொள்ள முக்குகண்ணாடி ஜடை பின்னிய நீள கூந்தல்.அடித்து நொறுக்கும் பிரவுன் கலர் சுடிதார் அர்த்தம் தெரிந்து அணிந்து இருந்த தூப்பட்டா. கழுத்தில் அழகாக அணிந்து இருந்த மெல்லிய செயின்.கைகளில் பேனா அருகே கிருஷ்ணன் படம் போட்ட நோட்,கொஞ்சம் தள்ளியே இருந்த மொபைல் பெண்ணுக்கே உண்டான அலட்டல் இல்லாத ரசனைமீகு தோற்றம்.என்ன மேடம் பயந்துட்டிங்களா????என்று சிரித்தால் சுப்ரியா
சுப்பு(எ)சுப்ரியா:
மீராவின் கல்லூரி தோழி பேஸ்புக் அக்கவுண்டில் "சுப்ரியா பாரதி" என்ற பெயர் சொல்லமால் சொல்லும் பாரதி கண்ட புதுமை பெண் அவள் அப்படியே மீராவின் நேர் எதிர் அங்கு அங்கு கண்கள் துறுதுறு என்று அழைந்தாலும் பார்வை அத்தனை கூர்மை கதிரவன் தேவையில்லை சுட்டெரிக்க இவள் கண்கள் மத்தியில்.வலது கையில் நேர்நோக்கி அணிந்து இருந்த கம்பிரமான வாட்ச்.நிமிர்ந்த நன்நடை நேர்கொண்ட பார்வை.தவறு செய்பவர்களை வசதியாக எட்டி மிதிக்கவும் இரண்டு கால் போட்டு அமரவும் ஜீன்ஸ் பேண்ட் யானை மிதித்து இறந்த பாரதி அறிந்து இருக்கமாட்டான் இந்த பெண் பாரதியை அறிந்து இருந்தால் இறக்கும் தருவாயிலும் நிம்மதி பெருமுச்சுவிட்டு இருப்பான்.மீண்டும் பிறந்தேன் என்று.நெஞ்சை இரு முறை அழுத்திகொண்டு "சத்தானை பார்த்த பயம் என்ன செய்ய"???
YOU ARE READING
நான் வருவேன்...!!!!
Horror(திங்கள் மட்டும் சனிக்கிழமை இரவு ஏபிசோடுகள் பதிவிறக்கப்படும் ) எனது வழக்கமான ரொமாண்டிக் கதைகளின் பாணியில் இருந்து மறுபட்டு எழுத தொடங்கிய சஸ்பென்ஸ் ஹாரர் கதை...!!!சுஜதாவின் புத்தகங்கள் எற்படுத்திய தாக்கத்தால் எழுத தொடங்கியது...!!!