பாகம் 1:இருள்

635 41 20
                                    

நள்ளிரவு இரவு ஒரு மணி இடி மின்னலுடன் மேகம் பிளந்ததுபோல மழை பெய்துகொண்டு இருந்தது...சுற்றி எங்கிலும் கரிய இருள் சூழ்ந்து அந்த இடத்தை நிரப்பிகொண்டு இருக்க தென்னைமரமும்,பனைமரமும் தங்கள் பங்குக்கு   கீரி....ச் கீரி..ச் என்று சத்தம் எழுப்பி கொண்டு இருந்தது...அங்கு அங்கு எலிகள் பொந்துலிருந்து வெளியே ஒடிகொண்டு இருக்க ஒடிய எலிகளை விசநாகங்கள் வேட்டையாடிகொண்டு இருந்தான சேற்று மண் வாசனை மனதுக்கு இதமான ஒரு உணர்வை தர கரிருள் இருட்டு அதை பீதியாக மற்றி அமைத்தது
              இருளின் நிளத்தை கெடுத்தவாறு ஒரு BENZ காரில் சேற்றைவாரி செடிகொடிகளுக்கு மேக்கப் இட்டவண்ணம் "அனந்த்" காவேரிபட்டினம் சென்றுகொண்டு இருந்தான் சடரென்று ஒரு முள்ளம்பன்றி ஒன்று குறுக்கே ஒட அதன் முள்பட்டு முன் டயர்கள் இரண்டும் பஞ்சராகி சற்று முன்னே சென்று நின்றது.முள்ளம்பன்றி தனது முதுகை இருமுறை குலுக்கிவிட்டு காட்டுக்குள் ஒடிமறைந்தது
                   "டேம்.....இட்"என்று அனந்த் தனது ஸ்டெரிங்கில் குத்திகொள்ள எதுக்கு இப்போ டயர் பஞ்சர் ஆனதுக்கு ஸ்டெரிங்க குத்துறா எப்பவும் தப்பு செஞ்சவாங்களை தண்டிக்கிற பழக்கம் இல்லையா என்று வாழைப்பழத்தில் ஊசி போல ஏற்றினால் மாலினி விவகாரத்து பெற்றகொள்ள துடிக்கும் தம்பதிகள்.....,

யூ ஷட் யூவர் ஏஸ் ஹோல்.......

ஹி...ம் ஐ வில் ஷட் பட் சொல்ல சொல்ல கேக்கமா இந்த நைட்ல அந்த ஊருக்கு எதுக்கு போகனும் அதுவும் இந்த காட்டுக்குள்ள

உன்னை அழைச்சுட்டு டூர் எல்லாம் போகலை எல்லாம் என் தலையெழுத்து பிஸினசும் செட்டகல ஒட்டிக்கிட்ட பீடையும் தொறத்திவிட முடியல..,அதான் குலதெய்வ கோவிலுக்கு போயி எதுவும் பூஜை பண்ணியாவது விரட்ட பாக்கிறேன் சனியன் என்று மறுபடியும் ஸ்டெரிங்கை குத்த

நல்ல குத்திக்கோ கொஞ்ச பாவாம பண்ணிருக்க நீயும் உன் குடும்பமும் அதான் பீடை ஒட்டிகிச்சு

போதும் தாயே!!!!நிறுத்து உன் பேச்சை கேக்க நான் மழையில நனையலாம் என்று வேகமாக வெளியே இறங்கி சென்று சுற்றும் முற்றும் பார்க்க தூரத்தில் ஒரு சிறுது பழடைந்த ஒரு வீடு இருப்பது தெரிந்தது..

நான் வருவேன்...!!!!Where stories live. Discover now