இரவு களைப்பில் தூங்கிய அவள் தொலைபேசி அலற எழுந்து பார்த்தாள்..😴
நேரம் சரியாக 5.30 என காட்டியது... வேண்டா வெறுப்புடன் குளியல் அறை சென்ற அவளின் மனது இலேசாக வலித்தது...😕
கவலையை ஒரு பக்கம் போட்டு விட்டு குளித்து வந்தாள்...
குளியல் அறை விட்டு வெளியே வந்து கடவுளை வேண்டி விட்டு...😊
கையில் கலந்த தேநீர் உடன் வெளியே( பால்கனியிற்கு ) வந்து நின்று இயற்கையை இரசிக்க ஆரம்பித்தாள்...😊சந்திரன் இரவு செய்த குறும்பின் களைப்பால் உறங்க செல்ல...
தன் கடமைக்கு நேரம் வந்து விட்டதை உணர்ந்த சூரியன்
மெது மெதுவாய் தூக்கம் விழித்து உலகை எட்டி பார்த்தது...😉தன் அன்பு காதலனின் கதிர் பட்ட சந்தோசத்தை பூக்கள் தம் வாசனை மூலம் வெளிக்காட்டி கொண்டு இருந்தது...😍
நேரம் நகர நகர அந்த இடம் முழுவதும் ஆட்களால் சூழ்ந்தது...
சிறு பிள்ளைகள் பாடசாலை செல்வதும் அவர்களின் ஒரே நிற சீருடையும் இரவு வரும் நட்சத்திரங்கள் போல் இயற்கை அழகை மேலும் அதிகரித்தது...
பிரிய மனம் இன்றி மனைவியை பிரிந்து வேலைக்கு செல்லும் ஆண்கள்...
குடும்ப பராமரிப்பிக்காக வேலைக்கு செல்லும் பெண்கள்...
பாட்டி , தாத்தாக்களின் உடற்பயிற்சி மன்றம்...
என அனைத்தையும் இரசித்த
அவளது கண்கள் ஒரு இடத்தை அசையாமல் நோக்கியது...😲
(தொடரும்)
YOU ARE READING
மீண்டு(ம்) வருவாயா?
Romanceநான் எழுதும் முதல் கதை...😜 . எதிர் பார்க்காமல் எழுந்த காதல்....😍 நட்பே துரோகமாக மாற திடீர் என வாழ்வில் ஏற்பட்ட புயல்.....😧 திசை மாறிப்போன காதல்....😢 கால சக்கரம் தன் கடமையையை சரியாக செய்ய... மீண்டு(ம்) வருவானா நம் நாயகன்...?🕛 காத்திருந்து பார்ப்...