வீட்டுக்கு சென்றவன் மிகுந்த சந்தோஷத்துடன் உள்ளே சென்றான்...😊
"அப்பா....அப்பா..."- ஆதி
"என்னப்பா... எதாலும் சாப்பிட வேணுமா"- திலீபன்
"அதெல்லாம் ஏதும் வேணாம்பா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்🙂"- ஆதி
"என்னப்பா சொல்லு"- திலீபன்
"இங்க வந்து உக்காருங்க"- என்றவன் தன தகப்பனின் கையை பற்றி சோபாவில் அமர வைத்தான்🤩.
"அப்பா நா ஒரு மேட்டர் சொல்லனும் எப்படி சொல்லணும்னு தெரில்ல😐"- ஆதி
"என்னன்னாலும் சொல்லுப்பா🤨"- திலீபன்
"நா ஒரு பொண்ண லவ் பண்றேன்பா இன்னும் அவகிட்ட சொல்லல்ல.. நேரடியா போய் பொண்ணு கேட்கலாம்னு தோணிச்சி அதான் உங்ககிட்ட கேக்கலாமேன்னு...😍"- ஆதி
"என்னப்பா சொல்ற நீ இப்டி சொல்றது எனக்கு எவளோ ஹாப்பியா இருக்கு தெரியுமா நீ அந்த பொண்ண கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்து இவ என் பொண்டாட்டினு சொல்லி இருந்தவே ஓகே சொல்லி இருப்பேன்...😀"- திலீபன்
"இல்லப்பா உங்ககிட்ட சொல்லாம நா எதுவும் பண்ணதில்ல அதான் கேட்டேன்😍"- ஆதி
"நீவேறப்பா..சரி சொல்லு யாரு பொண்ணு ? எங்க வீடு இருக்கு ? எப்ப பொண்ணு கேக்க போலாம்?"- திலீபன்
"அப்பா...அப்பா..கூல்...எதுக்கு உணர்ச்சிவசப்படறீங்க😜...அந்த பொண்ணு பேரு நிஷா ரொம்ப நல்ல பொண்ணு நம்ம சதிஷ் பிரண்ட் அகிலனோட அக்கா "- ஆதி
"அப்டியா அப்போ நாளைக்கே பொண்ணு கேக்க போலாம்"- திலீபன்
"டபுள் ஓகேப்பா😁...லவ் யு"- என்றவன் தன் தந்தையை கட்டி அணைத்து முத்தமிட்டுவிட்டு அறைக்கு சென்றான்😍.
அவன் சந்தோஷமாக அறைக்கு செல்வதை பார்த்துக்கொண்டு இருந்தவர் தன் அறைக்கு வந்து தன் மனைவியின் புகைபடத்திற்கு முன் நின்றார்😍
"லட்சுமிம்மா பாரு ஒம்பையன் எவளோ ஹாப்பியா இருக்கான். நீயும் ராகவியும் எங்கள விட்டு போனத்துல இருந்து எவளோ கவலையா இருந்தான் தெரியுமா? இப்போ அவன் வாழ்க்கைக்கு ஒரு வெளிச்சம் கிடச்சிருக்கு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ஒம்பையன் இவ்ளோ சந்தோஷமா இருக்குறத பார்க்க உனக்கு குடுத்து வெக்கல்ல...." - என தன் இறந்துபோன மனைவியிடம் அழுதவண்ணம் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார் திலீபன்😊
YOU ARE READING
மீண்டு(ம்) வருவாயா?
Romanceநான் எழுதும் முதல் கதை...😜 . எதிர் பார்க்காமல் எழுந்த காதல்....😍 நட்பே துரோகமாக மாற திடீர் என வாழ்வில் ஏற்பட்ட புயல்.....😧 திசை மாறிப்போன காதல்....😢 கால சக்கரம் தன் கடமையையை சரியாக செய்ய... மீண்டு(ம்) வருவானா நம் நாயகன்...?🕛 காத்திருந்து பார்ப்...