ஆதியின் மனம் குளிரும் வகையாக ஒரு பெயர் உச்சரிக்கப்பட்டது..😍
"அடுத்து பரிசை பெற ஆசிரியை ரேஷ்மா வை அழைக்கிறோம்"- என அறிவிப்பாளர் அழைக்க நிஷா மற்றும் பிரியா விற்கு மிகவும் சந்தோசமாக இருந்தது😊.
அவர்களை விட ஆதியிற்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.
ரேஷ்மா பரிசை பெற ஆதி அருகில் சென்றாள்.
"ஒனக்கு எல்லாம் பரிசு தர வேண்டி இருக்கே கால கொடுமை😉"
என ஆதி ரேஷ்மாவை சண்டைக்கு இழுக்க இது சண்டையிட சரியான இடம் இல்லை என்பதை உணர்ந்த ரேஷ்மாவோ ஆதியிற்கு முறைப்பு ஒன்றை பரிசாக வழங்கி விட்டு கீழே வந்தாள்😠.
அவனின் வாய் அவ்வாறு சொன்னாலும் மனதில் ரேஷ்மாவை நினைத்து பெருமையாகவே உணர்ந்தான்😀.
கீழே இறங்கிய ரேஷ்மா நேராக சென்று நிஷா அருகில் அமர்ந்தாள்.
"ரேஷ்மா... ஆதி சார் ஒனக்கு யாரு என்னமோ சொன்னார் போல இருந்திசே..🤔"-நிஷா
" ஓ...அவனா? அவன் என்னோட.."- என ரேஷ்மா கூறும் போதே அறிவிப்பாளர் அடுத்த பரிசை பெற நிஷாவை அழைத்தார்.
கவலை குழப்பம் இரண்டும் நிஷா மனதில் ஊஞ்சல் ஆடியது🤔.
இடம் கருதி முகத்தை இயல்பாக மாற்றிக்கொண்டு மேடைக்கு சென்றாள்."congratulations😊"- ஆதி
" thank you🙂"- நிஷா
என முகத்தில் எந்த உணர்வும் இல்லாமல் கூறினாலும் மனதில் ஏனோ ஒருவித சந்தோஷம் படர்வதை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை😍
மறுபக்கம் தன்னவளுக்கு பரிசு கொடுத்த மகிழ்ச்சியில்இறக்கை இல்லாமல் பறந்து கொண்டு இருந்தான் ஆதி😅.
மேடை இறங்கி ரேஷ்மாவை நோக்கி வந்த நிஷா
"இப்போ சொல்லுடீ"- என்றாள்
" wait..wait.. என்ன மேடம் விட்டா அடிச்சிருவீங்க போல😮"- ரேஷ்மா
"இல்லடீ...அது...😬"-என தான் அவசரப்பட்டதை மனதால் திட்டிக்கொண்டவள் ரேஷ்மாவை பார்த்து சிரித்து வைத்தாள்😁
"போதும் மேடம் வழியிது தொடச்சிக...
அவன் என்னோட பெரியம்மா பையன். ரொம்ப close எவளோ தான் சண்ட போட்டாலும் விட்டு கொடுக்கவே மாட்டான். சொந்த தங்கச்சி போல பார்த்துக்கொள்ளுவான்.இப்பகூட அவன் என்ன கலாய்ச்சான்.but எனக்கு பரிசு கெடச்சது என்னைவிட அவனுக்கு தான் ரொம்ப சந்தோஷமா இருக்கும்😊"-ரேஷ்மாஇதை கேட்ட நிஷாவின் மனதில் இனம் புரியாத தெளிவு பிறந்தது.ஆதியின் மேல் சிறிது காதல் படர்வதை அவளால் தவிர்க்க முடியவில்லை 😍 எனினும் அவள் அதனை காதல் என அடையாளப்படுத்த மறுத்தாள்.
அடுத்து பிரியாவிற்கும் பரிசு கிடைத்தது.நண்பிகள் மூவரும் தமக்கு கிடைத்த பரிசுகளை காட்டி சிறு பிள்ளைகள் போல் சந்தோஷப்பட்டுக்கொண்டு இருந்தனர்😄.
இதனை மேடையில் இருந்த ஆதி கவனிக்க தவறவில்லை.
தொடர்ந்து ஒவ்வொருவருக்காய் பரிசு கிடைக்க கடைசியாக விழா முடிவிற்கு வந்தது.
"எமக்காக விழாவில் கலந்துக்கொண்டு இத்தனை நேரம் பொறுமையாய் இருந்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் இத்துடன் எமது விழா நிறைவு பெறுகிறது மீண்டும் ஒரு விழாவில் சந்திப்போம் என கேட்டு விடை பெறுகிறேன் நன்றிகள்." -அறிவிப்பாளர்
என அறிவிக்கப்பட... முதலில் எழுந்தவன் ஆதியே...😂
எல்லாரும் அவனை ஏதோபோல் பார்ப்பதை கண்ட ஆதி தன் முட்டாள்தனத்தை கடிந்து கொண்டு அனைவரும் வெளியில் செல்லும் வரை உக்கார்ந்து கொண்டு இருந்தான்😜.
இதனை ரேஷ்மா கவனிக்க தவறவில்லை...
பாதிபேர் வெளியே சென்றிருக்க இதற்குமேலும் பொறுக்க முடியாதவனாய் எழுந்தான் ஆதி..😍
நிஷா வாசலில் இருக்க அவளை நோக்கி சென்றவனை ஒரு குரல் நிறுத்தியது.
"ஆதி சார்ர்ர்ர்......"😳
(தொடரும்..)
YOU ARE READING
மீண்டு(ம்) வருவாயா?
Romanceநான் எழுதும் முதல் கதை...😜 . எதிர் பார்க்காமல் எழுந்த காதல்....😍 நட்பே துரோகமாக மாற திடீர் என வாழ்வில் ஏற்பட்ட புயல்.....😧 திசை மாறிப்போன காதல்....😢 கால சக்கரம் தன் கடமையையை சரியாக செய்ய... மீண்டு(ம்) வருவானா நம் நாயகன்...?🕛 காத்திருந்து பார்ப்...